4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம்: வழிமுறைகளை வெளியிட்டது UGC - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 14, 2022

Comments:0

4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம்: வழிமுறைகளை வெளியிட்டது UGC



4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம்: வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி

4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் பி.கே.தாக்கூர் வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைகளின்படி இளநிலை படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகளை யுஜிசி வடிவமைத்துள்ளது. அதன்படி நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, இந்த படிப்பில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிட்டு மீண்டும் சேர்ந்து படிக்க முடியும்.

அதாவது, ஓராண்டில் வெளியேறுபவர்களுக்கு சான்றிதழ், 2-ம் ஆண்டுக்கு பட்டயச் சான்று, 3-ம் ஆண்டுக்கு இளநிலை பட்டச்சான்று, 4-ம் ஆண்டு வரை படித்து முடிப்பவர்களுக்கு இளநிலை பட்டத்துடன் ஹானர்ஸ் சான்றிதழும் வழங்கப்படும். அதிகபட்சம், சேர்ந்ததில் இருந்து 7 ஆண்டுக்குள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews