தொகுத்தறி மதிப்பீடு - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, September 13, 2022

Comments:0

தொகுத்தறி மதிப்பீடு - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்

தொகுத்தறி மதிப்பீடு - 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை தேர்வு தேதி அறிவிப்பு - Common Examinations - தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் இணைச் செயல்முறைகள்
எண்ணும் எழுத்தும் சார்ந்து தமிழ் , ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடத்திற்கான வளரரி மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது.

தற்போது . கலந்தாய்வு கூட்டத்தில் குறிப்பிடப்பட்டபடி எண்ணும் எழுத்தும் சார்ந்த தொகுத்தறி மதிப்பீட்டை ( Summative Assessment ) அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 19.09.2022 முதல் 30.09.2022 முடிய நடத்த தெரிவிக்கப்படுகிறது.

இம்மதிப்பீடு எண்ணும் எழுத்தும் செயலி மூலம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் . மேலும் , 4 ஆம் மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொகுத்தறி மதிப்பீட்டிற்கான PDF தொகுப்பு ( CD ) மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு 16 மற்றும் 17 ஆம் தேதி அன்று நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 4 மற்றும் 5 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் 26.09.2022 முதல் 30.09.2022 முடிய தொகுத்தறி மதிப்பீட்டினை நடத்த அறிவுறுத்தப்படுகிறது.

ஆகவே . இம்மதிப்பீட்டை முழுமையாக 30.09.2022 - க்குள் நடத்தி முடிக்கும்படி தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews