ஒரே கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான பணி நியமனங்களை பெற்று ஐஐடி மெட்ராஸ் சாதனை படைத்துள்ளது. சென்னையில் உள்ள ஐஐடி வளாக வேலைவாய்ப்புகள் வாயிலாக, ஒரே கல்வியாண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பணிநியமனங்கள் கிடைக்க செய்துள்ளது. 2021-22 கல்வியாண்டில் 380 நிறுவனங்களிடம் இருந்து 1,199 வேலைவாய்ப்புகள், கோடைகால உள்ளகப் பயிற்சியின் வாயிலாக 231 முன்வேலைவாய்ப்புகள் என மொத்தம் 1,430 வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
2018-19ம் கல்வியாண்டில் கிடைத்த 1,151 வேலைவாய்ப்புகளுடன் ஒப்பிடுகையில் இது முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையாகும். 14 நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட 45 சர்வதேச வேலைவாய்ப்புகளும் இதில் அடங்கும். நடப்பு ஆண்டில் 61 எம்பிஏ மாணவர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளதால், ஐஐடி மெட்ராஸின் மேலாண்மைக் கல்வித்துறை 100 விழுக்காடு வேலைவாய்ப்புக்கு வழிவகுத்துள்ளது. 2021-22ம் ஆண்டில் நடந்த வளாக வேலைவாய்ப்புகளை தேர்வு செய்தவர்களில் 80 விழுக்காடு மாணவர்கள் இதே ஆண்டில் பணிபுரிவதற்கு நியமனங்களை பெற்றுள்ளனர்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.