ஒரே பள்ளியில் 295 பேர் இடைநிற்றல்அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، أغسطس 10، 2022

1 Comments

ஒரே பள்ளியில் 295 பேர் இடைநிற்றல்அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள்

ஒரே பள்ளியில் 295 பேர் இடைநிற்றல்அதிர்ச்சியில் கல்வித்துறை அதிகாரிகள்

ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்ட அரசு பள்ளியில் படித்த, 295 மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இடையிலேயே நின்றதால், கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 1,500 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு படித்த, 54 பேர், பிளஸ் 1 படித்த, 139 பேர், பிளஸ் 2 படித்த, 52 பேர் என மொத்தம், 245 பேர் பள்ளியில் இடையிலேயே நின்றனர்.கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. மேலும், அடிக்கடி நீண்ட விடுமுறை எடுத்த, 50க்கும் மேற்பட்டோரும் இதுவரை கல்வியை தொடரவில்லை. கடந்தாண்டு இடைநின்ற மாணவ - மாணவியர், நடப்பாண்டும் பள்ளியில் சேரவில்லை. பொதுவாக, மலைக்கிராமங்களில் மாணவ - மாணவியர் பள்ளி இடை நிற்பது தொடர் கதை என்ற போதும், ஒரே பள்ளியில், 295 மாணவ - மாணவியர் இடைநின்றது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியது.

தகவல் உயரதிகாரிகள் வரை சென்ற நிலையில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஆய்வு செய்தார்.மாணவ - மாணவியர் வீடுகளுக்கு சென்று, மீண்டும் பள்ளியில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.

தொட்டமஞ்சு, நாட்றாம்பாளையம், மஞ்சுகொண்டப்பள்ளி உட்பட பல்வேறு மலை கிராம மாணவ - மாணவியர், 40 கி.மீ.,யில் உள்ள அஞ்செட்டி அரசு பள்ளிக்கு வந்து செல்ல சிரமப்படுகின்றனர். மேலும், மாணவியருக்கு குழந்தை திருமணத்தால், இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

هناك تعليق واحد:

  1. இடைநின்ற மாணவர்கள் பெரும்பாலும் கூலித்தொழில் செய்து வருவார்கள். அவர்களில் பெரும்பான்மையோர் மது,கஞ்சா,போதை பொருட்கள் பயன்படுத்துபவர்களாக மாணவர் நிலையில் இருந்து முற்றிலும் மாறி இருப்பர்.அவர்களை வகுப்பறை சூழலுக்கு கொண்டு வருவது சவாலான விஷயம்.மாணவிகள் பலருக்கு திருமணம் நடைபெற்றிருக்கும் அவர்களை எவ்வாறு பள்ளி அழைத்து வரமுடியும்?குழந்தை திருமணம் எனக்கூறி புகார் மட்டும் செய்து மணமகனை கைது செய்ய முடியும். ஆனால் எந்த அதிகாரமும் இல்லாத தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களால் என்ன செய்ய முடியும்?

    ردحذف

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة