பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 06, 2022

Comments:0

பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் பணி தீவிரம்

கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்களை, கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு குழுவினரிடம் பெற்றோர்கள் சமர்ப்பித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளியில் 2,348, சி.பி.எஸ்.இ., பள்ளியில் 400 மாணவ, மாணவியர் என மொத்தம் 2,748 பேர் படிக்கின்றனர்.இங்கு விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்ற மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ம் தேதி அதிகாலை தரைத்தளத்தில் இறந்து கிடந்தார். அதனைத் தொடர்ந்து 17ம் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில், வாகனங்கள், பள்ளியில் உள்ள மாணவர்களின் சான்றிதழ்கள் தீயிட்டு எரிக்கப்பட்டன.எரிந்த சான்றிதழுக்கு மாற்று சான்றிதழ் வழங்க கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில், மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) ராஜூ மேற்பார்வையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. மேலும், கலெக்டர் அலுவலகத்தில் சான்றிதழ் நகலைப் பெற துவங்கப்பட்டுள்ள முகாமில், மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் சான்றிதழ் நகல்களை வழங்கி வருகின்றனர்

.மெட்ரிக் பள்ளியில் பயிலும் 1,700, சி.பி.எஸ்.இ., பயிலும் 300 மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல்கள் மற்றும் விபரங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட சான்றிதழ் நகல்கள் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.அனைத்து மாணவ, மாணவியர்களின் சான்றிதழ் நகல், தகவல் பெறப்பட்டதும் கலெக்டர் மூலம் சம்மந்தப்பட்ட துறைக்கு தேவைப்படும் சான்றிதழ்களின் விபரங்கள் அனுப்பி, உடனடியாக புதிய சான்றிதழ் பெறப்பட்டு பெற்றோர்களிடம் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews