இன்ஜினியரிங் சேர்க்கைக்கு நாளை மறுநாள் தரவரிசை பட்டியல்: அதிகாரிகள் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 14, 2022

Comments:0

இன்ஜினியரிங் சேர்க்கைக்கு நாளை மறுநாள் தரவரிசை பட்டியல்: அதிகாரிகள் தகவல்

Officials said that Anna University is going to release the rank list for engineering admission the day after tomorrow. So far 2.11 lakh people have applied for engineering courses in Tamil Nadu. Among them, 1.69 lakh people who have completed the application process like payment and certificate uploading have qualified for the consultation.

Admission for these students will be held soon. Of this, 55 to 60 per cent government reserved seats in self-financed colleges and 1 lakh 96 thousand 627 B.E., B.Tech seats, about 900 seats in Annamalai University, 10 thousand seats in affiliated colleges of Anna University and 2 thousand 270 seats in Anna University campus colleges in Chennai. Places and B.Arch. 106 seats are available in the course.

434 engineering colleges are going to participate in this year's consultation. Since 2018, the number of colleges has been decreasing every year as 509, 480, 461, 440. Accordingly, the number of colleges has decreased in the current year as well. Despite the decline in the number of colleges, the All India Council for Technical Education (AICTE) is in emerging areas including CSE, Information Technology, Artificial Intelligence, Machine Learning, Data Science, Cyber ​​Security and Internet of Things. This year the number of admission seats has increased due to the admission of additional students.

In this situation, the rank list for the current year's engineering course is going to be published tomorrow (Tuesday). From 20th (Saturday) to 23rd following the ranking list, the consultation will be held for the special categories of sports, differently abled, children of ex-servicemen and 7.5 percent internal quota for government school students. After that, the consultation for the general category will be held from 25th to 21st October.

இன்ஜினியரிங் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலை கழகம் நாளை மறுநாள் வெளியிட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்பில் சேர இதுவரை 2.11 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் கட்டணம், சான்றிதழ் பதிவேற்றம் என முழுமையாக விண்ணப்பப்பதிவை முடித்திருந்த 1.69 லட்சம் பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் நடைபெற உள்ளது.

இதில் சுயநிதி கல்லூரிகளில் 55 முதல் 60 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 627 பி.இ., பி.டெக், இடங்களும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுமார் 900 இடங்களும், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 10 ஆயிரம் இடங்களும், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்து 270 இடங்களும், பி.ஆர்க். படிப்பில் 106 இடங்களும் வருகின்றன.

நடப்பாண்டு கலந்தாய்வில் 434 இன்ஜினியரிங் கல்லூரிகள் இடம்பெற உள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு முதல் முறையே கல்லூரிகளின் எண்ணிக்கையை பார்க்கையில் 509, 480, 461, 440 என ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருகிறது. அதன்படி, நடப்பாண்டிலும் கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

கல்லூரிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) சி.எஸ்.இ., தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், தரவு அறிவியல், இணைய பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் பகுதிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கைக்கு அனுமதித்துள்ளதால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த நிலையில் நடப்பாண்டுக்கான இன்ஜினியரிங் படிப்புக்கு தரவரிசை பட்டியல் நாளை மறு நாள் (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட உள்ளது. தரவரிசை பட்டியலை தொடர்ந்து வருகிற 20ம் தேதி (சனிக்கிழமை) முதல் 23தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அதன் பின்னர், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 25ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 21ம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews