கல்வி, மருத்துவ செலவு இலவசமா?: முதல்வர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 14, 2022

Comments:0

கல்வி, மருத்துவ செலவு இலவசமா?: முதல்வர்

Spending on education and healthcare is not free. Because it is related to the health of knowledge,'' said Chief Minister Stalin.

A program to provide welfare assistance to students was held at Kapaleeswarar College of Arts and Sciences, Koluthar, Chennai. In this, Chief Minister Stalin said:

In addition to the existing four courses in the college, a new course called B

A Saiva Siddhantham has been added. The number of seats is also increasing. For a total of 240 seats, 1,089 applications were received. The college has gained influence in a short span of time to the extent that it can accommodate only one in five students.

This year, not only the new students, but also the students who have passed the second year, have been arranged for free education. No fee should be underestimated; It is the duty of the government. Free is different; The Supreme Court has ruled that welfare schemes are different. In this regard, there is a big debate going on in the country.

Expenditure on education and healthcare is not free; Because it depends on the health of knowledge.

The government intends to develop and implement adequate welfare programs in both education and medicine. Now comes a new one to advise against freebies. We don't care about that. Thus, the Chief Minister spoke. Ministers Shekharbabu and Mahesh participated in the ceremony.

கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது என்பது இலவசம் ஆகாது. ஏனெனில், அது அறிவு நலம் சார்ந்தது,'' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். சென்னை, கொளத்துார் கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நடந்தது. இதில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

இக்கல்லுாரியில் ஏற்கனவே இருக்கக்கூடிய, நான்கு பாடப் பிரிவுகளுடன், புதிதாக பி.ஏ., சைவ சித்தாந்தம் என்ற பாடப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இடங்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கப் பட்டு உள்ளன.

மொத்தம் உள்ள 240 இடங்களுக்கு, 1,089 விண்ணப்பங்கள் வந்துள்ளன.

ஐந்தில் ஒருவருக்கு தான் இடம் தர முடியும் என்ற அளவுக்கு, கல்லுாரி குறுகிய காலத்தில் செல்வாக்கை அடைந்துள்ளது.

இந்த ஆண்டு புதிதாக சேர உள்ள மாணவர்கள் மட்டுமின்றி, இரண்டாம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவியருக்கும், இலவசமாக கல்வி கற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்டணம் இல்லை என்பதை குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது; இது அரசின் கடமை. இலவசம் வேறு; நலத்திட்டங்கள் வேறு என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இது தொடர்பாக, நாட்டில் பெரிய விவாதமே நடக்கிறது.

கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும் செலவு செய்வது, இலவசம் ஆகாது; ஏனெனில், அது அறிவு நலம் சார்ந்தது. கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டிலும், போதுமான அளவுக்கு நலத் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த, அரசு நினைக்கிறது. இலவசங்கள் கூடாது என்று சிலர் அறிவுரை சொல்வதற்கு, இப்போது புதிதாக வந்துள்ளனர். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. இவ்வாறு, முதல்வர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மகேஷ் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews