EMIS - தமிழக கல்வி கட்டமைப்பு சிதைக்கப்படும் அபாயம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 10, 2022

1 Comments

EMIS - தமிழக கல்வி கட்டமைப்பு சிதைக்கப்படும் அபாயம்!

EMIS - தமிழக கல்வி கட்டமைப்பு சிதைக்கப்படும் அபாயம்!

*கற்பித்தல் நேரத்தைக் கபளீகரம் செய்யும் EMIS*

ஆசிரியர்களின் மதிப்பு மிக்க கற்பித்தல் நேரத்தையும் மாணவர்களின் கற்றல் நேரத்தையும் வீணாக்கும் EMISஐயும் அதன் திறனை அறிந்தும் ஆசிரியர்களை அலைக்கழிக்க அதிகார மமதையில் வலம் வரும் பள்ளி கல்வி ஆணையரகம் முதல் வட்டாரக் கல்வி அலுவலகம் வரை உள்ள அதிகாரிகள் திருந்தா விட்டால் கல்வித்துறையை கரை சேர்க்க முடியாது.

மாநில அளவில் சில அதிகாரிகளும் மாவட்ட அளவில் சில அதிகாரிகளும் என நூறுபேர் தங்கள் அலுவலக மேஜையில் மீதுள்ள கணினியில் நாற்காலியை விட்டு எழுந்திரிக்காமல் புள்ளிவிவரங்களை பெற வேண்டும் என்பதற்காக

தமிழ்நாட்டின் பல இலட்சம் ஆசிரியர்கள் காலை வகுப்பறை சென்றவுடன் அலைபேசி ஆப்புகளுடன் அணுவணுவாய் சித்திரவதை படவேண்டுமா?

இனியாவது திருந்துங்கள்...

EMIS செயல்திறனை அதிகப் படுத்துங்கள்.

இல்லையேல் EMISக்கு மூடு விழா நடத்தி விட்டு மாற்று வழி யோசியுங்கள்.

மாணவர்களின் எதிர்காலத்தை வீணடித்து விட்டு யாருக்காக கல்வித்துறையை நடத்தப் போகிறீர்கள். இறுதியாக ஒன்று அதிகாரியாக இருந்து முடிவெடுத்தால் ஆயுளுக்கும் விடிவு கிடையாது.

அதிகாரிக்கும் அலுவலர்க்கும் ஆயிரம் வேறுபாடுகள் உண்டு.

அலுவலராக இருந்து சிந்தியுங்கள் அப்போதாவது விடிவு கிடைக்குமா பார்ப்போம்.

*-இப்படிக்கு*

*EMIS ஆல் நொந்து போன ஆன தமிழ் நாட்டு ஆசிரியர்*

*EMIS ம் 6796 இடைநிலை ஆசிரியர்களும்*

மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்த இடைநிலை ஆசிரியர்கள் 6796

இரண்டு வேலை நாட்களில் மாறுதல் பெற்றவர்கள் 340

மீதி உள்ள 6456 ஆசிரியர்கள் இரண்டு தற்செயல் விடுப்பை இழந்திருக்கிறார்கள்.

6456 x 2நாட்கள் 12912 கற்பித்தல் நாட்களை தொடக்கக் கல்வித்துறை இழந்திருக்கிறது.

6456 ஆசிரியர்களுக்கும் சராசரியாக ஒரு ஆசிரியர்க்கு 30 மாணவர்கள் என்று எடுத்துக் கொண்டால் கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் மாணவர்களின் மதிப்பு மிக்க கற்றல் நேரத்தை வீணடித்த கல்வித் துறை அதிகாரிகள் வெட்கப்படவேண்டாமா?

ஒரு நாளைக்கு 200 ஆசிரியர்களுக்குக்கூட மாறுதல் வழங்கும் திறனற்ற EMIS வைத்துக் கொண்டு

6796 இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஒரே நாளில் மாவட்ட மாறுதல் வழங்கி

அடுத்த நாள் பட்டதாரி ஆசிரியர் 6773 பேருக்கும் மாவட்ட மாறுதல் வழங்கிடத் திட்டம் வகுத்த அதிகாரிகள்

நாசா விஞ்ஞானிகளைவிட திறன் வாய்ந்த விஞ்ஞானிகள்.

கடந்த வருடம் lkg, ukg சென்ற ஆசிரியர்களுக்கு இதேபோல் மாறுதல் வழங்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை மாவட்டத் தலைநகரங்களில் பல நாட்கள் காக்க வைத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் இந்த அதிகாரிகள்.

தற்போதைய மாவட்ட மாறுதலும் முந்தைய சரித்திர சாதனையை முறியடிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

1 comment:

  1. Blue tick வராவிட்டால் memo என்று கூறிய அதிகாரிகள் கற்றல் நேரங்கள் வீணாவதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews