பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 04, 2022

Comments:0

பொறியியல் படிப்புகளின் இன்றைய நிலை என்ன?

தென்னிந்தியாவில் கல்விக்கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையும், கல்வி வாராக் கடன் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன (ஆர்பிஐ)

12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது.

உயர்கல்வியில் மாணாக்கர் சேர்க்கை விகிதங்களை, 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்கவேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை வலியுறுத்திகிறது. பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்கலைக் கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவும் (ஏஐசிடிஐ) பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

உதாரணமாக, சில பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 12ம் வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியல் உள்ளிட்ட பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்று ஏஐசிடிஐ முன்னதாக அறிவித்தது. கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், எலெக்ட்ரானிக்ஸ், வேளாண் பொறியியல், பயோ டெக்னாலஜி, என்ஜினியரிங் கிராபிக்ஸ், தொழிற்திறன், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் மூன்றில் தேர்ச்சி பெற்றால் போதுமானது என்று அறிவித்தது. இதன் காரணமாக, இந்தாண்டு பொறியியல் சேர்க்கைக்கான தேவை முந்தைய ஆண்டுகளை விட அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அசாத்தியமான வளர்ச்சி:

உலகில் நான்கு இன்ஜினியர்களில் ஒருவர் இந்தியாவில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 40 ஆண்டுகளில் பொறியியல் கல்லூரிகளின் வளர்ச்சி விகிதம் 29 மடங்கு அதிகரித்துள்ளது. அதே சமயம், பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை 42 மடங்கு அதிகரித்துளளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் தரவுகளின் படி, 2019-20-ல் ஒட்டுமொத்த உயர்கல்வி மாணவர் சேர்க்கையில், பொறியியல் துறையின் பங்கு மட்டும் 17.5 ஆகும்.

90களுக்குப் பிந்தைய காலங்களில் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான திறன்களையும் மனப்பாங்குகளை வழங்கும் வகையில் பொறியியல் துறை பார்க்கப்பட்டது. இந்திய போன்ற வளரும் நாடுகளில் பொறியியல் படிப்புகள் சமூக அளவில் மாற்றத்திரிக்கான ஒரு ஆயுதமாகவும் இருந்து வருகிறது. கல்வி வாய்ப்புகள், தேசிய தேவைகள், தனிமனித அபிலாஷைகளை பூர்த்தி செய்து வருகின்றன.

உதாரணமாக,கடந்த 30 ஆண்டுகளில் பொறியியல் துறையில் பட்டியல் மாணவர்களின் சேர்க்கை விகிதங்கள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, 1975 ல், பொறியியல் படிப்புகளில் மாணவியர்களின் எண்ணிக்கை வெறும் 2.2 ஆக இருந்த நிலையில், 2018-19ல் மாணவியர்களின் பங்கு 30% ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும், இத்தகைய வளர்ச்சி போக்கு தனக்கான சமச்சீரற்ற தன்மையை உருவாக்கியுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். நாட்டின் 46% பொறியியல் நிறுவனங்கள் ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களில் அமைந்திருக்கிறன. நாட்டின் 50% பொறியியல் மாணவர்கள் தென்னிந்தியாவில் படித்து வருகின்றனர். தனிநபர் வருமானம், அரசியல் விழிப்புணர்வு, இளைஞர்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்புகள் உருவாக்கம், வங்கிகள் சேவை கட்டமைப்பு போன்ற பல்வேறு காரணங்கள் இதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது
ஏஐசிடிஇ தரவுகளின் படி, பிகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேஷ், ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், உத்தர பிரதேசம், டெல்லி, சண்டிகர் என நாட்டின் 45% மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் வெறும் 17% பொறியியல் கல்வி நிறுவனங்கள் தான் அமைந்துள்ளன.

தனியார் கல்லூரிகளின் ஆதிக்கம்: இன்று பொறியியல் கல்வியில் தனியார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. கிட்டத்திட்ட பொறியியல் மாணவர்களில் 85% பேர் தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். அதே சமயம், உயர்கல்விக்கான மத்திய/மாநில அரசுகள் நிதி முதலீட்டில் படிப்படியாக சரிவு ஏற்பட்டு வருகிறது.

தென்னிந்தியாவில் கல்விக்கடன் பெறுபவர்களின் எண்ணிக்கையும், கல்வி வாராக் கடன் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன (ஆர்பிஐ).

செல்வந்தர்கள் மட்டுமே உள்நுழைய வாய்ப்பு இருந்த காலம் மாறி, இன்று அனைத்து வகையான மக்களும் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஏஐசிடிஇ தரவுகளின் படி, தேவைக்கும் அதிகமான பொறியியல் கல்வி நிறுவனங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும், சராசரியாக 8 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews