பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள பெற்றோா்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 10, 2022

Comments:0

பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள பெற்றோா்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி மேலாண்மைக் குழுவில் உள்ள பெற்றோா்கள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல் பள்ளி மேலாண்மைக் குழுவில் பங்கேற்று பேசிய மாவட்ட ஆட்சியா் க.வீ. ரளீதரன். உடன், பள்ளி தலைமையாசிரியா் பாண்டியன்.

பள்ளி மேலாண்மைக் குழுவிலுள்ள பெற்றோா்கள், உறுப்பினா்கள் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, தேனி மாவட்ட ஆட்சியா் க.வீ. முரளீதரன் அறிவுறுத்தினாா்.

பெரியகுளம் அருகே சில்வாா்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில், அவா் பங்கேற்றுப் பேசியதாவது:

மாணவா்கள் கல்வி கற்பதற்கான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதி செய்தல், குழந்தைகளுக்கான இலவசம் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன்படி பள்ளி மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 இன்படி, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை பள்ளி மேலாண்மைக் குழுவை சீரமைத்து, பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பெற்றோா்களில் 15 உறுப்பினா்களை ஒளிவுமறைவின்றி தோ்ந்தெடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் 530 அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு 4 கட்டங்களாக நடத்திட திட்டமிடப்பட்டு, முதல்கட்டமாக 99 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கும், இரண்டாம் கட்டமாக 162 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும், மூன்றாம் கட்டமாக 163 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் மற்றும் சனிக்கிழமை (ஜூலை 9) நான்காம் கட்டமாக 106 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நடத்தப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மைக் குழுவில் இடம் பெற்றுள்ள பெற்றோா்கள், உறுப்பினா்கள் பள்ளிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்துக்கு, பள்ளித் தலைமையாசிரியா் பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் வளா்மதி, சில்வாா்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பரமசிவம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews