Higher Education Minister Ponmudi said that so far 2 lakh female students have applied for the Rs.1,000 monthly scholarship scheme. Talking to the media, the minister said that the online consultation will be held to join the colleges.
ரூ.1,000 மாத உதவித்தொகை திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்தார்.
பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரியவில்லை. சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியான பிறகு மாணவர்கள் விண்ணப்பிக்க 5 நாட்கள் வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது.
163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க நேற்று அவகாசம் முடிந்த நிலையில் அவகாசம் நீட்டிப்பு வழங்கியுள்ளோம். அரசு மற்றும் கலைக் கல்லூரிகளில் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். பொறியியல் கல்லூரிகளில் சேர வரும் 17ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.1000 ரூபாய் உதவித்தொகை பெற இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரிகளில் சேர ஆன்லைன் கலந்தாய்வு நடைபெறும்.கல்லூரிகளில் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,என்றார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.