தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல்: 163 கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல் இடம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 17, 2022

Comments:0

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியல்: 163 கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல் இடம்

தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் 163 கல்வி நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதல் இடத்தை பிடித்துள்ளது. சென்னை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய கல்வி நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) மாநிலம் முழுவதும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதில் ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் 4-வது முறையாக முதல் இடத்தை பெற்று இருந்தது. இதேபோல், பல்கலைக்கழகம், கல்லூரி, என்ஜினீயரிங், மேலாண்மை, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம், ஆராய்ச்சி நிறுவனம் போன்ற பிரிவுகளிலும் சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் சிறந்த கல்வி நிறுவனங்களாக வெளியிடப்பட்ட பட்டியலின் அடிப்படையில், எந்தெந்த மாநிலங்களில் அதிக கல்வி நிறுவனங்கள் வருகின்றன? என்ற புள்ளிவிவரத்தைக் கொண்டு, மாநிலங்களின் தரவரிசையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தமிழ்நாடு 163 கல்வி நிறுவனங்களுடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

2-வது இடத்தை 93 கல்வி நிறுவனங்களுடன் டெல்லியும், 3-வது இடத்தை 88 கல்வி நிறுவனங்களுடன் மராட்டியமும் பிடித்துள்ளது. அதனைத்தொடர்ந்து முறையே கர்நாடகா, உத்தரபிரதேசம், பஞ்சாப், கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, குஜராத், ராஜஸ்தான், அரியானா, உத்தரகாண்ட், அசாம், ஜார்க்கண்ட், சண்டிகர், இமாசலபிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews