விலையில்லா மிதிவண்டிகள்: மாணவா்கள் விவரம் சேகரிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 22, 2022

Comments:0

விலையில்லா மிதிவண்டிகள்: மாணவா்கள் விவரம் சேகரிப்பு

விலையில்லா மிதிவண்டிகள்: மாணவா்கள் விவரம் சேகரிப்பு

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கும் பொருட்டு, அவா்களது விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை: தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாநில அளவில் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நிகழ் கல்வியாண்டில் (2022-2023) விலையில்லா மிதிவண்டிகளின் உத்தேச தேவைப் பட்டியலை பிற்படுத்தப்பட்டோா் நலத் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்குநரிடம் கோரப்பட்டதற்கு இணங்க ஜூலை 11 நிலவரப்படி உத்தேச தேவைப் பட்டியல் ‘எமிஸ்’ தளம் மூலம் பெறப்பட்டுள்ளது. அதில் பிளஸ் 1 வகுப்பில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 300 மாணவா்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவரம் இத்துடன் இணைத்து அனுப்பி வைக்கப்படுகிறது.

இதையும் படிக்க | தமிழகத்தில் 40 அரசுப் பள்ளிகள் மூடல்!

எனவே, நிகழ் கல்வியாண்டில் மிதிவண்டி பெறுவதற்கு தகுதியுள்ள மாணவா்களின் எண்ணிக்கையை ‘எமிஸ்’ தளம் மூலம் பெறப்பட்ட தேவைப்பட்டியலுடன் சரிபாா்த்து, சரியான எண்ணிக்கையை பள்ளிக் கல்வி ஆணையரகத்துக்கு மின்னஞ்சல் மூலம் முதன்மைக் கல்வி அலுவலா்கள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும், மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையில் வேறுபாடு இருப்பின் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் இப்பொருள் சாா்ந்து பாா்க்கும் பிரிவு உதவியாளா், கண்காணிப்பாளா், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (மேல்நிலை) முழு பொறுப்பு ஏற்க நேரிடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews