பாரதிய ஜனதா கட்சி போராட்டத்திற்கு கண்டனம் ஆசிரியர்கள் கண்டனம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 03, 2022

Comments:0

பாரதிய ஜனதா கட்சி போராட்டத்திற்கு கண்டனம் ஆசிரியர்கள் கண்டனம்!

பாரதிய ஜனதா கட்சி போராட்டத்திற்கு கண்டனம் TNHHSSGTA ன் கண்டனம்

தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய கிராமப்புற ஏழை எளிய குழந்தைகளுக்கு பல்வேறு நெருக்கடியான நிலையிலும் தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மிகுந்த அக்கறையோடும் தியாக உணர்வோடும் பணியாற்றி அந்த மாணவர்களை தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்துவதற்கு விடுமுறை நாட்கள், பள்ளி நேரத்துக்கு அப்பாற்பட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் பாரதிய ஜனதா கட்சி அரசு தொடர்பு பிரிவு என்ற பெயரில் ஆசிரியர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இதுவரை எந்த அரசியல் கட்சியும் செய்யாத நடவடிக்கையாக தேர்ச்சி சதவீதம் குறைந்த ஆசிரியர்களை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என நாளை மாவட்ட கல்வி அலுவலகத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் என அறிவித்திருப்பதற்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் புதுக்கோட்டை மாவட்ட கிளையின் சார்பாக வன்மையாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் இந்த போராட்டத்திற்கு தமிழக அரசும் காவல்துறையும் அனுமதி வழங்கக்கூடாது என்பதையும் மாவட்ட கிளையின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் என்பது ஆசிரியரை மட்டுமே சார்ந்தது என ஒரு உளவியல் ரீதியான புரிதலே இல்லாத ஒரு அரசியல் கட்சி இருப்பதை நினைத்து நாங்கள் வேதனைப்படுகிறோம்.

இந்தியாவின் கல்வி முறையும் தற்போது நிலவிவரும் கல்விமுறையும் மத்திய அரசு இன்றைக்கு அறிவித்திருக்கக்கூடிய தேசிய கல்விக் கொள்கை எந்த மாணவனையும் படிக்கவிடாமல் செய்யக்கூடிய கல்வி முறையைஇந்த நாடு பெற்றுள்ளது ஏற்கனவே தேசிய கல்விக் கொள்கையில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளில் தேர்வு வைத்து தேர்வு என்ற முறையில் மாணவர்களை கல்வியை சூழ்நிலையை விட்டு குலக்கல்விக்கு அனுப்பும் திட்டத்தை மத்தியில் ஆளும் மத்திய அரசு செய்து கொண்டு மாணவர்களின் மீது அக்கறை உள்ளவர்கள் போல காட்டிக்கொள்வதற்காக அரசியல் லாபத்திற்காகவே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. எல்லோருக்கும் கல்வி கொடுக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறோம்.

இந்தியாவின் கல்விக் கொள்கையில் தனியார்மயம் தாராளமயக் கொள்கையில் தனியார் பள்ளிகளை திறந்து விட்டு காசு உள்ளவர்களுக்கு கல்வி என்றும் நிலையை உருவாக்கியது யார்?

கிராமப்புறங்களில் வாழும் வசதி வாய்ப்பு இல்லாத படிப்பறிவு குறைவாக உள்ள பெற்றோர்களின் குழந்தைகளை வறுமையில் வாடிக் கொண்டு பள்ளிக்கு வந்து செல்லும் மாணவர்களை வீட்டில் சென்று அழைத்து வந்து கல்வி கற்றுக் கொடுத்து தேர்வு எழுத வைத்து தேர்ச்சி விதத்தை பெற்று தந்திருக்கிறோம் என்ற அந்த புரிதல் கூட இல்லாத பாரதிய ஜனதா கட்சி ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறது.

இன்றைக்கு இந்த இந்திய நாட்டினுடைய கல்வி வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்பு இவற்றையெல்லாம் சுதந்திரத்திற்கு பின்னால் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகளை ஒப்பீடு செய்து அதில் யார்? காலத்தில் பின்னடைவு ஏற்பட்டது என்ற அடிப்படையில்

நடவடிக்கை எடுத்தால் அல்லது எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டால் தங்களுடைய நிலைப்பாடு என்ன என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். தமிழகத்தின் ஆசிரியர்கள் இதுவரை அரசியலாய் பார்க்காமல் எந்த அரசியல் கட்சி தலைமை ஏற்று ஆட்சி நடத்தினாலும் அந்த அரசுகளுடைய செயல்பாட்டில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் இருக்கக்கூடிய பள்ளிச் சூழல் ,அடிப்படை கட்டமைப்பு, மாணவருடைய குடும்பச் சூழல் ,

குழந்தைகளின் மனநிலை இவற்றைப் பொறுத்து அதற்கு ஏற்றார் போல இந்த கல்வியை செம்மையாக கற்றுக் கொடுத்து இந்த தேர்ச்சி சதவீதத்தை பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளாத அரசியல் கட்சியாக BJPயை நாங்கள் பார்க்கின்றோம்.

இதுவரை எங்களுடைய கோரிக்கைக்காகவும் இந்த மாணவர்களுடைய நலனுக்காகவும் சமூக நலனுக்காகவும் அரசுகளை எதிர்த்துப் போராடி இருக்கின்றோமே தவிர, எந்த அரசியல் கட்சியும் எதிர்த்துப் போராட வேண்டிய சூழ்நிலையை இதுவரை யாரும் ஏற்படுத்தவில்லை ஆனால் தற்போது இந்த போராட்டத்தைப் பார்த்துக் கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது என்ற நிலையில் அனைத்து ஆசிரியர்களையும் ஒன்று திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனவே தமிழக அரசு உடனடியாக இந்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம். இவண்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்

புதுக்கோட்டை மாவட்டம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews