உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு அமல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الأربعاء، مايو 11، 2022

Comments:0

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு அமல்

The Minister has said that Rs.1000 will be given to the students studying in higher education from the next academic year. Higher Education Minister Ponmudi told reporters in Chennai.

உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூ.1000 வழங்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். இதனை சென்னையில் செய்தியாளர்களிடம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம்தோறும் ரூ. 1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று இந்தாண்டிற்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், பொறியியல் கலந்தாய்வு குறித்து மே 17ஆம் தேதி கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும், குளறுபடி இல்லாமல் ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்த ஏற்பாடு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة