தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 18, 2022

Comments:0

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள்

தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரக இணை இயக்குநரின் (மேல்நிலைக்கல்வி) செயல்முறைகள், சென்னை 600 006 ந.க.எண். 42857 /டபிள்யு.1/இ1/2021, நாள் 17.05.2022

பொருள்

தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி 01.01.2022 ல் உள்ளவாறு அரசு/நகராட்சி மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் நியமனம் ஊட்டுப் பதவிகளிலிருந்து பதவி உயர்விற்கான உத்தேச கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயார் செய்யக் கருத்துருக்கள் கோருதல் - சார்பாக.

1,அரசாணை (நிலை) எண். 176, பள்ளிக்கல்வித் (பக5(1) துறை, நாள் 17.12.2021 2,தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், ந.க.எண். 42857 /டபிள்யு.1/இ1/2021, நாள் 28.01.2022 பார்வை

பார்வை 2 ல்காணும் செயல்முறைகளின்படி 01.01.2022 நிலவரப்படியான அரசு/நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 31.05.2022 ல்ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு கூடுதல் தேர்ந்தோர் பட்டியல் தயாரிக்க 2015-2016 ம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களில் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற்றவர்களை தவிர மீதமுள்ள தகுதிவாய்ந்த அரசுஉயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் விவரங்கள் மற்றும் 01,01,2018 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களில் பணிவரன்முறை எண் 13628 வரையுள்ள அரசு உயர்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களின் விவரங்களை கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு 23.05.2022 க்குள் டபிள்யு1 பிரிவிற்கு மின்னஞ்சலில் (widset n@gmail.com) அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும்தெரிவிக்கப்படுகிறது. அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்கு TamilNadu Government Gazette Part III section 1(b) date 30.01.2020 ல் அரசாணைநிலைஎண், 14 பள்ளிக்கல்வி (பக2(1)) நாள்.30.01.2020ல் தெரிவித்துள்ளவாறு கீழ்க்கண்ட துறைத்தேர்வுகள்தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

1. Tamil Nadu Government Office Manual Test

2.Account test for Executive Officers Or Account test for Subordinate officers part 1

3. Tamil Nadu School Education Department Administrative test Paper -1 and paper- || தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(b)ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள அரசுஉயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது. தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17(a) ன்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை பெற்று தண்டனை காலம் முடிவடையாத உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்க கூடாது.

மேலே குறிப்பிட்டுள்ளவாறு தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மற்றும் தண்டனை பெற்றுள்ள அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களை மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்விற்கு பரிந்துரைக்கப்படும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்ல விரும்பும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கருத்துருக்களை மட்டும் முதன்மைக் கல்வி அலுவலரின் பரிந்துரையுடன் அனுப்பப்பட வேண்டும். மேலும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களைப் பொறுத்தமட்டில் அரசாணையின்படி, மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வில் செல்ல விருப்பக் கடிதம் அளிப்பது (அல்லது) அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில் செல்ல விருப்பக் கடிதம் அளிப்பது ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றிற்கு பதவி உயர்வில் செல்ல அளிக்கப்படும் விருப்பக் கடிதமே இறுதியானது. அதனை மீண்டும் ஒரு முறை மாற்றி அமைத்திட இயலாது. ஆகையினால் மாவட்டக் கல்வி அலுவலராக (அல்லது) அரசு மேல்நிலைப் பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியராகப் பதவி உயர்வில் செல்வதற்கு அளிக்கப்படும் விருப்பக் கடிதத்தினை ஆழ்ந்து சிந்தித்து சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அளிக்க அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறும், மேலும் மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வில் செல்ல விருப்பக் கடிதம் அளித்தவர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலராகவும், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகப் பதவி உயர்வு கோரும் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியராகவும் பதவி உயர்வு பெற விண்ணப்பங்களை பரிந்துரை செய்ய வேண்டும்.

தவறும் பட்சத்தில் சார்ந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்கண்ட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை பதவி உயர்விற்கு தகுதியுடைய ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து அனுப்புமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு - 1.படிவம் 2, Access Shect ஒம்/-மு.இராமசாமி இணைஇயக்குநர் (மேல்நிலைக்கல்வி) ஆசிரியர் பெறுநர்-அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின்னஞ்சல் வழி) / நகல் - அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews