புதுச்சேரி காமராஜர் கல்வித் துறை வளாகத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கல்வியாண்டு நாட்காட்டியை வெளியிட்டார். இந்த நாட்காட்டியில் பள்ளிகள் செயல்படும் நாள், விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களிடம் கூறியது:
“புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு கடந்த 5-ம் தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் நாளையுடன் முடிவடைகிறது. விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் 1-ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
முதல்வர் ரங்கசாமியின் அறிவுறுத்தலின்படி, 2022 - 2023-ம் கல்வியாண்டுக்கு புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 1 முதல் 10, 12-ம் வகுப்புகளுக்கு 23-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 17-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று முதல் அரசுப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும். 11-ம் வகுப்பு தொடங்கப்படும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப திட்டம்
பள்ளிகள் திறக்கும் நாள் முதல் மாணவர் பஸ் இயக்க திட்டமிட்டுள்ளோம். அன்றைய தினமே பாட புத்தகங்கள், சீருடை வழங்கப்படும்.
புதிதாக 70 ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய ஆசிரியர்களை நிரந்தரம் செய்துள்ளோம்.
மொழி ஆசிரியர்களை நியமித்துள்ளோம். பள்ளி திறக்கும் முன்பே ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப திட்டமிட்டுள்ளோம். நடப்பு கல்வியாண்டில் சனிக்கிழமை பள்ளிகள் இயங்காது. பள்ளிகள் திறப்பு, தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். புதுவையில் முழுமையாக சிபிஎஸ்இ திட்டத்தை அமல்படுத்துவது குறித்தும் ஆலோசனை உள்ளது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் சென்றால் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்ற தேவை இருக்காது” என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.