TNPSC - குரூப் - 4 தேர்வர்கள் அதிருப்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 07, 2022

Comments:0

TNPSC - குரூப் - 4 தேர்வர்கள் அதிருப்தி!

TNPSC - Problem in obtaining Tamilvazhi certificate; Group - 4 selectors dissatisfied!

In the 'Group-4' post, there is a problem in obtaining the Tamil way certificate for the government job examinations and there is a demand on the part of the selectors to conduct a special camp in the schools and issue the certificate. The 'Group-4' selection to fill vacancies in various posts in Tamil Nadu government departments will take place on July 24. Applications must be registered by the 28th day of the exam. If you have studied Tamil up to 10th standard in this examination, you will get 20% reservation for it.

To get this allocation, millions of people are trying to get Tamil way certification in the schools they attended. Based on the Class 10 General Examination Certificate of the Examiners, the certificates are easily issued in the schools. However, in schools from 1st to 5th and 8th standard, there is a problem in obtaining Tamil way certificate.

Selectors do not have alternative certification for elementary and middle schools. Those who had the alternative certificate, gave it away when they joined the high schools. Currently, a copy of it; Have suffered without any other contact documents.

As a result, there is a problem in issuing Tamil medium certificates in government and private primary and secondary schools. To solve the problem, there is a demand that the school education department should facilitate the process of issuing Tamil way certificates.

There is a demand for proper inspections and issuance of Tamil Way Certificate on the basis of old documents, records or copy of school identity document of the students in the schools. TNPSC - தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல்; குரூப் - 4 தேர்வர்கள் அதிருப்தி!

'குரூப் - 4' பதவியில், அரசு பணி தேர்வுகளுக்கான தமிழ்வழி சான்றிதழ் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி சான்றிதழ் வழங்க வேண்டும் என, தேர்வர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு துறைகளில், பல்வேறு பதவிகளில் காலியிடங்களை நிரப்ப 'குரூப் - 4' தேர்வு, ஜூலை 24ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த தேர்வில், 10ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்திருந்தால், அதற்கான 20 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்கும்.

இந்த ஒதுக்கீட்டை பெற, லட்சக்கணக்கானோர் தாங்கள் படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் பெற முயற்சித்து வருகின்றனர். தேர்வர்களின் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு சான்றிதழ் அடிப்படையில், பள்ளிகளில் எளிதில் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. ஆனால், ஒன்று முதல் 5, 8ம் வகுப்பு வரை படித்த பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்வர்களிடம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கான மாற்று சான்றிதழ் இல்லை. மாற்று சான்றிதழ் வைத்திருந்தவர்கள், அதை உயர்நிலைப் பள்ளிகளில் சேரும்போது கொடுத்து விட்டனர். தற்போது, அதன் நகலோ; வேறு தொடர்பு ஆவணங்களோ இல்லாமல் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

இதனால், அரசு மற்றும் தனியார் தொடக்க, நடுநிலை பள்ளிகளில், தமிழ் வழி சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கலுக்கு தீர்வு காண, தமிழ் வழி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை பள்ளி கல்வித்துறை எளிதாக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பழைய ஆவணங்கள், பதிவேடுகள் அடிப்படையிலோ அல்லது பள்ளி அடையாள ஆவணத்தின் நகல் அடிப்படையிலோ, உரிய ஆய்வுகள் செய்து, தமிழ் வழி சான்றிதழ் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews