இருக்கையை உடைக்கும் மாணவர்கள்: பள்ளிகளில் தொடரும் அட்டகாசம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 25, 2022

Comments:0

இருக்கையை உடைக்கும் மாணவர்கள்: பள்ளிகளில் தொடரும் அட்டகாசம்

The release of a video of students breaking seats and tables at a government school has caused a stir and shock.

A botany teacher working at Madanur Government High School in Tirupati district has ordered students who do not submit a 'record note' to bring their parents. Thus, some of the enraged students recently released a video of him trying to attack him.

It was followed by a video of a group of students teasing a teacher who was teaching a class at another school and dancing around the waist, posted on a social networking site. In this line, in one of the videos released yesterday, in the public school classroom, in front of the student, the video shows the students breaking their iron chairs and tables, piece by piece, to show their heroism.

The incident is said to have taken place at Thorappadi Government Secondary School in Vellore district. இருக்கையை உடைக்கும் மாணவர்கள்

அரசு பள்ளி ஒன்றில், இருக்கைகள் மற்றும் மேஜைகளை மாணவர்கள் உடைக்கும் வீடியோ வெளியாகி இருப்பது, பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்துார் மாவட்டம், மாதனுார் அரசு மேல்நிலைப் பள்ளியில், 'ரெக்கார்ட் நோட்' சமர்ப்பிக்காத மாணவர்கள், பெற்றோரை அழைத்து வர வேண்டும் என, அங்கு பணிபுரியும் தாவரவியல் ஆசிரியர் உத்தரவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த மாணவர்கள் சிலர், அவரை தாக்க முயற்சித்த வீடியோ சமீபத்தில் வெளியானது.

பள்ளிகளில் தொடரும் அட்டகாசம்

அதைத் தொடர்ந்து, மற்றொரு பள்ளியில், வகுப்பில் பாடம் நடத்தும் ஆசிரியையை, ஒரு தரப்பு மாணவர்கள் கிண்டல் செய்து, இடுப்பை ஆட்டி நடனம் ஆடும் வீடியோவும், சமூக வலைதளத்தில் வெளியானது. இந்த வரிசையில், நேற்று வெளியான வீடியோ ஒன்றில், அரசு பள்ளி வகுப்பறையில், மாணவியரின் முன், மாணவர்கள் தங்கள் வீரத்தை காட்ட, இரும்பாலான இருக்கை மற்றும் மேஜைகளை, துண்டு, துண்டாக உடைக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த சம்பவம், வேலுார் மாவட்டம் தொரப்பாடி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது.அரசு பள்ளிகள், பெருமையின் அடையாளம் என்று கூறும், தமிழக கல்வித் துறையின் வரலாற்றில், கடந்த ஓராண்டுகளாக நடக்கும் சம்பவங்கள் போல வரலாற்றிலேயே நடந்தது இல்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews