அரசு பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, April 01, 2022

Comments:0

அரசு பள்ளி ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

தர்மபுரி அன்னசாகரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன்(44). இவர், இண்டூர் கூலி கொட்டாய் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றினார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், இப்பள்ளியில் படித்து வந்த 14 வயது மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து ஆசிரியர் கோவிந்தனை கைது செய்தனர்.

இவர் மீதான வழக்கு விசாரணை, தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் நீதிபதி சையத் பர்கத்துல்லா தீர்ப்பு வழங்கினார். மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக ஆசிரியர் கோவிந்தனுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும், ₹25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். Govindan (44) hails from Dharmapuri Annasakaram area. He worked as a math teacher in a government school in Kottai, Indore. In April last year, he raped a 14-year-old student at the school. Following a complaint lodged by the student's parents, the Pennagaram All Women's Police Station arrested teacher Govindan on charges under the Pokcho Act.

The case was heard in the Dharmapuri District Women's Speedy Trial Court. Judge Syed Barkatullah delivered the verdict in the case yesterday. Teacher Govindan was sentenced to 20 years in prison and fined ₹ 25,000 for raping a student.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews