TRB தேர்விலும் கடும் கட்டுப்பாடு பெல்ட், ஆபரணங்கள் அணிந்து வர தடை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, February 11, 2022

Comments:0

TRB தேர்விலும் கடும் கட்டுப்பாடு பெல்ட், ஆபரணங்கள் அணிந்து வர தடை

நாளை துவங்க உள்ள முதுநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வுக்கு, 'நீட்' தேர்வு போல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பெல்ட் மற்றும் ஆபரணங்கள் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர் பணியில், 2,207 காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., தேர்வில் கணினி வழி போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.

நாளை துவங்க உள்ள இந்தத் தேர்வு, உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 19ம் தேதி தவிர, 20ம் தேதி வரை நடக்க உள்ளது. மாநிலம் முழுதும் 180 மையங்களில் 2.6 லட்சம் பேர் பங்கேற்க, 'ஹால் டிக்கெட்' வழங்கப்பட்டு உள்ளது. தேர்வர்கள் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க, நீட் தேர்வுக்கு இணையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க | தன்னாா்வலா்களுக்கு கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் அளிப்பு

கட்டுப்பாடுகள் என்ன?

* ஹால் டிக்கெட்டை பிரதி எடுத்து, அதில், டி.ஆர்.பி., குறிப்பிட்டுள்ளபடி, புகைப்படம் ஒட்டி எடுத்துச் சென்று, தேர்வறையில் ஒப்படைத்து விட வேண்டும். தேர்வர்கள் முன் கூட்டியே நகல் எடுத்து வைத்து கொள்ளவும்

* இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். முதல் ஊசி போட்டிருந்தால், இரண்டாவது ஊசிக்கான தவணை கடந்திருக்க கூடாது தடுப்பூசி போடாதவர்கள், தேர்வு நேரத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன், பி.சி.ஆர்., சோதனை செய்திருக்க வேண்டும். 'பாசிட்டிவ்'வாக இருந்தால், சுகாதாரத்துறையின் வழிமுறை பின்பற்றப்படும். முககவசம், தனி மனித இடைவெளி பின்பற்ற வேண்டும்

* வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், பான் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் கார்டு ஆகியவற்றில், ஏதோ ஒரு அட்டையை அடையாள முகவரிக்கு எடுத்து வர வேண்டும். தேர்வு துவங்குவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு முன், தேர்வு மையத்திற்கு வர வேண்டும் * போலீஸ் அல்லது டி.ஆர்.பி., சார்பிலான பணியாளர்கள் தேர்வு மைய நுழைவு வாயிலில் சோதனை செய்வர். 'மொபைல் போன், மைக்ரோ போன், கால்குலேட்டர், லாக் டேபிள்ஸ், பேஜர், டிஜிட்டல் டைரி' உள்ளிட்ட எந்த மின்னணு சாதனத்தையும் எடுத்து வர அனுமதியில்லை

* 'பெல்ட்' அணிந்து வர அனுமதியில்லை. எந்த ஆபரணமும் அணியக்கூடாது.

இதையும் படிக்க | Employment NewsPaper 12-18 February 2022 PDF

குதிகால் உயரமான காலணிகள் மற்றும் 'ஷூ' அணிந்து வரக்கூடாது. சாதாரண காலணிகளையே அணிந்து வர வேண்டும்

* சில விடைகளை எழுதி கண்டுபிடிப்பதற்கான வெற்று தாள்கள், பேனா, பென்சில் போன்றவை, தேர்வறையில் வழங்கப்படும். அந்த தாள்களை, தேர்வு முடியும் போது தேர்வறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட வேண்டும்

* ஆள் மாறாட்டம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டால், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews