அறிவோம் மேட் தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الاثنين، فبراير 21، 2022

Comments:0

அறிவோம் மேட் தேர்வு - விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 28

அறிவோம் மேட்

அறிமுகம்:ஆல் இந்தியா மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் - ஏ.ஐ.எம்.ஏ., எனும் லாபநோக்கமற்ற அமைப்பு &'மேட்’ தேர்வை நடத்துகிறது. மேலாளர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கில் 1957ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த அமைப்பில், தற்போது 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். தேர்வு, தொலைநிலைக் கல்வி, திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, ஆராய்ச்சி, மேலாண்மை வளர்ச்சி திட்டங்கள் என பல்வேறு பணிகளை ஏ.ஐ.எம்.ஏ., மேற்கொண்டு வருகிறது.

முக்கியத்துவம்:கடந்த 1988ம் ஆண்டு முதல் நடத்தப்படும் ஒரு தரப்படுத்தப்பட்ட இந்த சோதனை தேர்வை குறிப்பாக எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்ள விரும்பும் மாணவர்கள் எழுதுகின்றனர். இந்திய அரசின் அப்போதைய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் 2003ம் ஆண்டு, இத்தேர்வை தேசிய அளவிலான தேர்வாக அங்கீகரித்தது.
இதன்படி, எந்தவொரு வணிக மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனமும், இத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை வழங்கலாம். தற்போது, இந்தியா முழுவதிலும், சுமார் 600 கல்வி நிறுவனங்கள் இத்தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டம் பெற்ற எவரும் இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். தற்போது இறுதியாண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம்.

தேர்வு முறை: நாடு முழுவதிலும் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் மூன்று வடிவங்களில் ஆண்டுக்கு நான்கு முறை ‘மேட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இணையதளம் வாயிலான தேர்வு - ஐ.பி.டி.,, காகிதம் வாயிலான எழுத்து தேர்வு - பி.பி.டி., கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு - சி.பி.டி., அல்லது மாணவர்களின் விருப்பத்தைப் பொறுத்து, இவை இணைந்த தேர்வாகவும் எழுதலாம்.

விண்ணப்பிக்கும் முறை: https://mat.aima.in/feb22/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். மாணவரது இ-மெயில் முகவரி, டிஜிட்டல் வடிவிலான புகைப்படம், கையொப்பம் ஆகியவற்றுடன் ஆன்லைன் வாயிலாக தேர்வுக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்..

விண்ணப்பிக்க கடைசி நாள்:பி.பி.டி., - பிப்ரவரி 28.
சி.பி.டி., - மார்ச் 7

தேர்வு நாள்: பி.பி.டி., - மார்ச் 6
சி.பி.டி., - மார்ச் 13

விபரங்களுக்கு: www.aima.in

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة