பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, February 01, 2022

Comments:0

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2022

பொதுத்துறை நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பைப்லைன் பிரிவில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:  137

பணி: Engineering Assistant (Mechanical, Electrical, T&I, Operations, ) Grade-IV
சம்பளம்: மாதம் ரூ.25,000 - 1,05,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ரூமெண்டேசன், எலக்ட்ரிக்கல் மற்றும் கம்யூனிகேசன், ரேடியோ கம்யூனிகேசன், டெலி கம்யூனிகேசன், கெமிக்கல் போன்ற ஏதாவெதாரு பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 
வயதுவரம்பு: 24.01.2022 தேதியின்படி 18 முதல் 26க்குள் இருக்க வேண்டும்.

பணி: Technical Attendant-1 Grade-I
சம்பளம்: மாதம் ரூ.23,000 - 78,000
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், மெஷினிஸ்ட்,  டர்னர், ஓயர்மேன், மெக்கானிக்(டீசல்), மெக்கானிக் இன்டூஸ்ரியல் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் இரண்டு ஆண்டு ஐடிஐ முடித்திருக்க வேண்டும். டீசல் பிரிவுக்கு ஒரு ஆண்டு ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, உடற்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.plapps.indianoil.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 27.03.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.02.2022

மேலும் விவரங்கள் அறிய  https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f208970689d44356aa9b0028ced1d5cb.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews