WhatsApp குழுக்களின் உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகளை அட்மின்கள் அழிக்கும் வசதி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, January 31, 2022

Comments:0

WhatsApp குழுக்களின் உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகளை அட்மின்கள் அழிக்கும் வசதி

வாட்ஸ்ஆப் குழுக்களின் உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகளை அட்மின்கள் அழிக்கும் வசதி விரைவில் கொண்டு வரப்படவுள்ளன.

மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்ஆப்பை செயலியை உலகம் முழுவதும் பல கோடி பேர் உபயோகித்து வருகின்றனர். இந்த செயலியில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. குறிப்பாக, விடியோ கால், வாய்ஸ் கால், குரூப் கால் போன்ற வசதிகள் உள்ளன. பல செயலிகள் வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக ஆரம்பிக்கப்பட்டாலும் வெற்றி காண முடியவில்லை. இருப்பினும், வாட்ஸ்ஆப் குரூப்பில் உறுப்பினர்கள் அனுப்பும் தேவையில்லாத செய்திகளை அந்த குரூப் அட்மினால் அழிக்க முடியாத குறை பல நாள்களாக பயனர்களால் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாட்ஸ்ஆப் டிராக்கரான டபள்யூஏ பெட்டா இன்ஃபோ வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,

வாட்ஸ்ஆப் குழுக்களில் உறுப்பினர்கள் அனுப்பும் செய்திகளை இனி அட்மின்களே அழித்துக் கொள்ளும் வசதியை வாட்ஸ் ஆப் நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

அட்மின்களால் செய்தி அழிக்கப்பட்டால், ‘இந்த செய்தி அட்மினால் அழிக்கப்பட்டது’ என்று குழுக்களில் உள்ள பிற உறுப்பினர்களுக்கு தெரியும் வசதியை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கம்ப்யூட்டர் அல்லது இணையதளம் மூலம் ‘வாட்ஸ்ஆப் வெப்’ பயன்படுத்துவதற்கு இரு முறை சரிபார்த்தல் (2 ஸ்டெப் வெரிபிக்கேஷன்) முறையையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews