ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய வேறுபாடு குறைபாடுகளை நிவர்த்தி செய்திடவும் திருத்திய ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்து PAB ஊதியம் வழங்கிட கோரிக்கை*
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு 2018 முதல் 2020 வரை ஊதிய உயர்வு இல்லாத நிலையில் கடந்த ஆண்டு 16.11.2020 அன்று 20 % சதவீத ஊதிய உயர்வு மற்றும் ஊதிய நிர்ணயம் வழங்கப்பட்டது . வட்டார வளமைய தலைப்பின் கீழ் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதிய வேறுபாடு உள்ளதாக 20.11.2020 அன்று மதிப்புமிகு மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களிடம் கோரிக்கை கடிதத்தை மேலான பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டது .
ஆனால் , இதுநாள் வரை ஊதிய நிர்ணயத்தினை மறுபரிசீலனை செய்யப்படாமல் புதியதாக 11.11.2021 அன்று 15 % ஊதிய உயர்வு வழங்கி இருப்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது . இதனால் 2010 ( RMSA ) 2014 , 2015 ( SSA ) தொகுப்பூதியப் பணியாளர்களுக்கு இன்னும் ஊதிய வேறுபாடு அதிகமாக உள்ளதால் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை தங்களின் மேலான பார்வைக்கு தெரிவித்துக் கொள்கிறோம் . ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதியப் பணியாளர்கள் சார்பில் தங்கள் பாதம் தொட்டு வேண்டுவது தொகுப்பூதிய பணியாளர்களின் ஒரே பணிநிலைக்கு நான்கு விதமான ஊதியம் என்பது வேலை செய்யும் இடத்தில் மிகப்பெரிய பாகுபாடு ஏற்படுகிறது . எனவே , ஊதிய வேறுபாடு அதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்திடவும் மத்திய அரசு PAB -ல் உள்ளவாறு ஊதிய நிர்ணயத்தை மறுபரிசீலனை செய்தும் பின்னர் ஊதிய உயர்வு வழங்கிட எங்களின் வாழ்வாதாரத்தை காத்திட எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிட மதிப்பிற்குரிய அய்யா அவர்களை தாழ்மையுடன் வேண்டுகிறோம்
Search This Blog
Sunday, November 28, 2021
Comments:0
Home
ASSOCIATION
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய வேறுபாடு குறைபாடுகளை நிவர்த்தி செய்திட கோரிக்கை
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி தொகுப்பூதிய பணியாளர்களின் ஊதிய வேறுபாடு குறைபாடுகளை நிவர்த்தி செய்திட கோரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.