இந்திய புனர்வாழ்வு கவுன்சில் - சேர்க்கை அறிவிப்பு: 2021 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, October 16, 2021

Comments:0

இந்திய புனர்வாழ்வு கவுன்சில் - சேர்க்கை அறிவிப்பு: 2021

புனர்வாழ்வுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBER), 2021-22-ம் கல்வியாண்டிற்கு மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் சேர்க்கை நடைமுறை: 2021 மூலம் நாடு முழுவதும் உள்ள RCI அங்கீகரித்த பயிற்சி நிறுவனங்கள்/ பல்கலைக்கழக (துறை(கள்) மூலம் நடத்தப்படும் சிறப்பு கல்வி மற்றும் உடல் ஊனமுற்றோர் புனர்வாழ்வு பிரிவில் D.Ed.Spl.Ed.(IDD), D.Ed.Spl.Ed(HI), D.Ed.Spl.Ed(VI), D.I.S.L.I., DTISL & D.Ed.Spl.Ed (MD) படிப்புகளில் சேருவதற்கு தகுதிவாய்ந்த | அபேட்சகர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த கோர்ஸ்களில் சேர்க்கையானது 12-ம் |வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். | டிப்ளமோ நிலை கோர்ஸ்களில் சேருவதற்கான தகுதி கூறு கீழ்வருமாறு:

i) சிறப்பு கல்வி கோர்ஸ்: குறைந்தபட்சம் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் அங்கீகரிக்கப்பட்ட மத்திய / மாநில கல்வி வாரியத்தில் 10 +2 அல்லது அதற்கு சமமான தேர்வு தேர்ச்சி

ii) சைகை மொழி (DTISL) அங்கீகரிக்கப்பட்ட மத்திய/மாநில கல்வி வாரியத்தில் குறைந்தபட்சம் மொத்தம் 45% மதிப்பெண்களுடன் 10 +2 அல்லது அதற்கு சமமான தேர்வில் தேர்ச்சி பெற்ற காது கேளாத மாணவர்கள் மட்டும். உடல் ஊன (காது கேளாமை) சான்றிதழ் மற்றும் ISL-ல் புரிதல்/ உற்பத்தி திறன் தேர்ச்சி சான்றிதழ். SC/ST/OBC/PwD/EWS பிரிவு மாணவர்கள் சேர்க்கைக்கான ஒதுக்கீடு சம்பந்தப்பட்ட மாநில / யூனியன்பிரதேச

அரசுகளின் விதிமுறைகளின்படி அனுமதிக்கப்படும். ஆன்லைன் பதிவு வலைதளம் திறக்கும் & மூடப்படும் தேதி: 12 அக்டோபர் 2021-11 நவம்பர் 2021

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.500/- மற்றும் SC, ST மற்றும் EWS பிரிவு அபேட்சகர்களுக்கு ரூ.350/-. PwD

அபேட்சகர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். | விண்ணப்ப கட்டணத்தை இந்திய வங்கிகளால் வழங்கப்பட்டுள்ள டெபிட் கார்டு / நெட்பேங்கிங்/ கிரெடிட் கார்டு பயன்படுத்தி பேமண்ட் கேட்வே மூலம் செலுத்த வேண்டும். செலுத்தப்பட்ட கட்டணம் எந்தஒரு சூழ்நிலையிலும் திருப்பி தரப்படமாட்டாது. |விருப்பமுள்ள அபேட்சகர்கள் ஷெட்யூல், டிப்ளமோ நிலை கோர்ஸ் பட்டியல், காலம், தகுதி, பாடத்திட்டம், கோர்ஸ் | கட்டணம், மாநிலம் வாரியாக பயிற்சி நிறுவனங்களின் பட்டியல், சேர்க்கை வழிகாட்டல் நெறிமுறைகள், விண்ணப்ப | கட்டணம், பதிவு வலைதளம் திறக்கும் மற்றும் மூடப்படும் தேதி சம்பந்தமான விரிவான தகவலுக்கு கவுன்சில் இணையதளம் www.rehabcouncil.nic.in-ஐ பார்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews