Breaking

Tuesday, September 21, 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் இளநிலை கட்டிடக்கலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

அண்ணா பல்கலைக்கழகத்தில், இளநிலை கட்டிடக்கலை பட்டபடிப்பிற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:


அண்ணா பல்கலைக்கழகம், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளால் ஒப்படைக்கப்பட்ட இடங்களுக்கான முதலாமாண்டு பி.ஆர்க் பட்டப்படிப்பிற்கு 2021-22ம் கல்வியாண்டில் சேர்க்கை பெற விண்ணப்பங்கள் வாவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விருபுவர்கள் https://www.tneaonline.org அல்லது https://www.tndte.gov.in. என்ற இணையதள வாயிலாக விண்ணப்பித்தல் வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், தங்களின் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க எதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ளது. அங்கு நேரடியாக சென்று விண்னப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 6ம் தேதி ஆகும். care@tneaonline.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog