சென்னை:கல்விக் கட்டணம் தொடர்பாக, தனியார் பள்ளிகள் விண்ணப்பங்களை அனுப்ப, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுயநிதியில் செயல்படும் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, சுயநிதி பள்ளிகள் கல்விக் கட்டண கமிட்டி செயல்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டில், கல்விக் கட்டணம் தொடர்பாக விண்ணப்பங்களை அனுப்புவதற்கான அவகாசம் ஏற்கனவே முடிந்து விட்டது.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில் எழுந்த கோரிக்கையை தொடர்ந்து, வரும் 30ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி, கல்விக் கட்டண கமிட்டி தனி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.