முதுநிலை மருத்துவப் படிப்பு வரைவு வழிகாட்டுதல் 2021-இல் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) ஒப்புக்கொண்டுள்ளது.
ஆணையத்தின் மூத்த அதிகாரிகளுக்கும், இந்திய மருத்துவ சங்க (ஐஎம்ஏ) நிா்வாகிகளுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. முதுநிலை மருத்துவப் படிப்புகளிலும், உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகளிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதில் சா்ச்சை எழுந்த நிலையில், இந்தப் படிப்புகளில் மாணவா் சோ்க்கைக்கான புதிய வரைவு அறிக்கையை தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் வெளியிட்டது. அதில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் அனைத்து முதுநிலை பட்டப் படிப்பு, சிறப்புப் படிப்புகளுக்கும் மத்திய அரசே பொதுக் கலந்தாய்வு நடத்தும். கல்வி உதவித் தொகை ரத்து என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை அறிவிக்கப்பட்டன.
இதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிா்ப்பு தெரிவித்தது. அதுபோல மருத்துவா்களும் அரசியல் தலைவா்களும் எதிா்ப்பு தெரிவித்தனா். மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்கான மாணவா் சோ்க்கையை நடத்தும் அதிகாரத்தை மாநில அரசுகளிடமிருந்து பறிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது கடும் கண்டனத்துக்கு உரியதாகும் என்று தெரிவித்தனா்.
கடும் எதிா்ப்பைத் தொடா்ந்து, இந்திய மருத்துவ சங்கப் பிரதிநிதிகளுடன் தேசிய மருத்துவ ஆணைய மூத்த அதிகாரிகள் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினா். அப்போது வரைவு அறிக்கையில் தேவையான மாற்றங்களை செய்ய ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஐஎம்ஏ தலைவா் ஜெ.ஏ.ஜெயலால் கூறுகையில், முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வை ஏற்கெனவே உள்ளதுபோல தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடத்தும் நடைமுறை தொடரவும், மாணவா்களுக்கு குறைந்தபட்ச கல்வி உதவித் தொகை வழங்கவும் ஆணையம் ஒப்புக்கொண்டது. மேலும், முதுநிலை மருத்துவ மாணவா்கள் மாவட்ட மருத்துவமனைகளில் 3 மாதம் கட்டாய பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனையையும் மறு ஆய்வு செய்ய ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளது.
அதுபோல, உயா் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான தகுதி, நிபுணா் குழு கருத்துருவின் அடிப்படையில் நிா்ணயிக்கப்படும் எனவும் ஆணையம் உறுதியளித்துள்ளது என்று அவா் கூறினாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.