தமிழகத்தில் உள்ள 7அரசு கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்கள் பிஎட் படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளநிலை B.Ed முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை நாளை முதல் வருகின்ற 22 ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அதன்படி, www.tngasaedu.in , www.tngasaedu.org ஆகிய இணையதள முகவரிகளில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அவ்வாறு இணையத்தில் பதிவு செய்ய இயலாத மாணவர்கள் அருகில் உள்ள கல்வியியல் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.எட். படிப்பிற்கு விண்ணப்பிக்க, பொதுப் பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் 500 ரூபாய் ஆகும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களின் விண்ணப்பக் கட்டணம் 250 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது வரிசைப்படி தாங்கள் விரும்பிய கல்லூரியை தேர்வு செய்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த விவரங்களை மாணவர்கள் www.tngasaedu.in,www.tngasaedu.org ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்.
இணையத்தில் பதிவு செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 04428271911 என்கிற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பி.எட் படிப்புக்கான விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணத்தை இணையதளம் வாயிலாக டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமாக செலுத்தலாம்.
இணையதளம் வாயிலாக கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் கல்லூரிக் கல்வி இயக்ககம் அமைத்துள்ள உதவி மையங்களில் The director, directorate of collegiate education chennai-6 என்கிற பெயரில் செப்டம்பர் 13 அல்லது அதற்கு பின்னர் பெறப்பட்ட வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Search This Blog
Monday, September 13, 2021
Comments:0
B.Ed படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்: அறிவிப்பு வெளியீடு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.