பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ஆப்டோமெட்ரி படிப்புக்கு அக்., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

السبت، سبتمبر 25، 2021

Comments:0

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் ஆப்டோமெட்ரி படிப்புக்கு அக்., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

'டாக்டர் அகர்வால்ஸ்' கல்லுாரியில், இளங்கலை மற்றும் முதுகலை 'ஆப்டோமெட்ரி' படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


டாக்டர் அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் கல்வி நிலையத்தில், இளங்கலை பிஸ்.எஸ்சி., மற்றும் எம்.எஸ்சி., ஆப்டோமெட்ரிக் படிப்புக்கு தலா 100 இடங்கள் உள்ளன.இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கையில் சேர விரும்பும் மாணவர்கள், அக்., 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை, https://www.dragarwal.com/study என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, 91673 98613 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


இதுகுறித்து, கல்லுாரி முதல்வர் கற்பகம் தாமோதரன் கூறியதாவது:பார்வைத்திறன் சோதனை நிபுணர்கள் என அறியப்படும், ஆப்டோமெட்ரிஸ்ட்கள், கண்களை பரிசோதித்து, கண்ணில் உள்ள நோய்களை கண்டறிகின்றனர்.இந்த படிப்பை முடித்தோர், கண் மருத்துவர்கள், மூளை நரம்பியல் நிபுணர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து பணியாற்ற முடியும்.இந்த படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة