நீட் தேர்வு விண்ணப்ப திருத்தம் நாளை இறுதி நாள் – NTA அறிவிப்பு!
தேசிய தேர்வு முகமை 2021 நீட் தேர்வுகளுக்கான விண்ணப்ப திருத்தம் ஆகஸ்ட் 14ம் தேதியான நாளையுடன் முடிவடைவதாக அறிவித்துள்ளது. இந்த பதிவில் தேர்வு குறித்த விவரங்கள், தேர்வு முறை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு:
2021 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு விண்ணப்ப பதிவு செய்வதற்கு ஜூலை 13 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 11ம் தேதி முதல் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை நீட் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் இருப்பின் அதனை செய்து கொள்ள மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் நீட் தேர்வுக்கு 11,236 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை மதியம் 2 மணிக்குள் மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்கள் இருந்தால் அதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விண்ணப்பத்தில் உள்ள திருத்தங்களை மாணவர்கள் மாணவர்கள் ntaneet.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் மாணவர்கள் செய்து கொள்ளலாம்.
வினாத்தாள் முறை:
நடப்பாண்டு நீட் தேர்வில் வினாத்தாள் முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரபூர்வ தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ,அதன்படி, 2021 நீட் தேர்வில், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு பாடங்கள் உள்ளது. ஒவ்வொரு பாடத்திலும், பலதேர்வு அடிப்படையிலான வினாக்கள் இரண்டு பிரிவுகளாக கொடுக்கப்பட்டிருக்கும். A பிரிவில் 35 வினாக்கள் மற்றும் B பிரிவில் 15 வினாக்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் 10 கேள்விகளுக்கு மாணவர்கள் பதிலளிக்க வேண்டும். ஒவ்வொரு வினாவிற்கு 4 மதிப்பெண்கள் என்ற விகிதத்தில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.