’சேட்’ தேர்வு - மேலும் விபரங்களுக்கு: https://collegereadiness.collegeboard.org/ - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 15, 2021

Comments:0

’சேட்’ தேர்வு - மேலும் விபரங்களுக்கு: https://collegereadiness.collegeboard.org/

முக்கியத்துவம்:காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ப அவ்வப்போது தேர்வில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் ’சேட்’ தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை வழங்குகின்றன. ஆண்டுதோறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.


யார் விண்ணப்பிக்கலாம்:
பள்ளிப்படிப்பை முடித்து வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் உயர்கல்வியை பெற விரும்பும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:
பொதுவாக, வாசித்தல், கணிதவியல், எழுதுதல் மற்றும் மொழியியல் ஆகிய மூன்று பிரிவுகளில், மொத்தம் 1600 மதிப்பெண்களுக்கு சேட் தேர்வு நடத்தப்படுகிறது.

மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ‘கட்டுரை’ தேர்வை எழுதலாம்.

தேர்வு நேரம்:
கட்டுரை தேர்வுடன் சேர்த்து, 3 மணி 50 நிமிடங்களுக்கு நடைபெறுகிறது. கட்டுரை தேர்வை தவிர்த்து 3 மணிநேரத்திற்கு நடத்தப்படுகிறது.

வாசித்தல் பிரிவு - இந்த பிரிவில் வாக்கியத்தை நிறைவு செய்தல், பத்திகளைப் படித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்தல் என மொத்தம் 52 கேள்விகள் கேட்கப்படும்.

பொருளியல், உளவியல், சமூகவியல், சமூக அறிவியல் ஆகிய பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது. 65 நிமிடங்களுக்கு இந்த பிரிவில் தேர்வு நடைபெறுகிறது. கணிதவியல் பிரிவு - குறியீடு, எண்ணிலக்க கேள்விகள், இயற்கணிதம் மற்றும் சிதறல் வரைபடங்கள் ஆகிய வகை கேள்விகளை இந்த பிரிவு கொண்டுள்ளது. 58 கேள்விகளுக்கு 80 நிமிடங்கள் இந்த பிரிவு தேர்வை எழுதலாம். எழுதுதல் மற்றும் மொழி பிரிவு - விருப்ப கேள்விகள், விரிவான கட்டுரை எழுதுதல் ஆகிய பகுதிகளை இந்த பிரிவு உள்ளடக்கியுள்ளது. சரியான விடையை தேர்ந்தெடுத்தல், பிழையை கண்டறிதல், வாக்கியத்தை மேம்படுத்துதல் ஆகிய வடிவில் கேள்விகள் அமைந்திருக்கும். 44 கேள்விகளுக்கு 35 நிமிடங்களில் பதில் அளிக்க வேண்டும்.

தேர்வு காலம்: ஆண்டிற்கு ஏழு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:
இதற்கான விண்ணப்பப் பதிவை மாணவர்கள் சேட் தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளலாம். இந்தியாவில் சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. விபரங்களுக்கு: https://collegereadiness.collegeboard.org/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews