e-RUPI என்றால் என்ன? – முழு விவரங்கள் இதோ! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

بحث هذه المدونة الإلكترونية

الثلاثاء، أغسطس 03، 2021

Comments:0

e-RUPI என்றால் என்ன? – முழு விவரங்கள் இதோ!

இந்திய தேசிய கட்டணக் கழகம் உருவாக்கியுள்ள டிஜிட்டல் கட்டண முறையான e-RUPI முறை நாட்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்த முழு விவரங்களையும் காண்போம்.

பிரதமரின் அறிவிப்பு:

பிரதமர் நரேந்திர மோடி, 2021 ஆகஸ்ட் 2, திங்கள் கிழமை அன்று e-RUPI என்ற ப்ரீபெய்ட் இ-வவுச்சரை அறிமுகப்படுத்தினார். இந்த முறை மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மக்களை நேரடியாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்திய தேசிய கட்டணக் கழகம் (NPCI) உருவாகியுள்ள நேரடி தொடர்பற்ற மற்றும் பணமற்ற முறையாகும்.

e-RUPI செயல்படும் முறை:

e-RUPI குறிப்பிட்ட சேவைகளில் மக்களுக்கும் வழங்குநர்களுக்கு இடையில் எந்த வித இடைத்தரகரும் இல்லாமல் சரியான நேரத்தில் பணம் கிடைப்பதை உறுதி செய்கிறது. மேலும், நேரடியாக சென்று வாங்கும் நடைமுறையை மாற்றியுள்ளது. மேலும், தாய் மற்றும் குழந்தைகள் நலத்திட்டங்கள், காசநோய் ஒழிப்பு திட்டங்கள் போன்றவற்றின் கீழ் மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்குவதற்கும் e-RUPI பயன்படுத்த முடியும். e-RUPI ஆனது செயல்பாடுகளுக்காக நிறுவனங்கள் அல்லது அரசு அலுவலகங்கள் SMS அல்லது QR குறியீடு பகிரப்படும். இதுவரை ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, இண்டுசிந்த் வங்கி, இந்தியன் வங்கி, கோடக் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி மற்றும் யூனியன் வங்கி போன்ற 11 வங்கிகள் e-RUPI உடன் இணைந்துள்ளது.

e-RUPI பயன்பாட்டுக்காக வவுச்சரின் பிரிண்ட் அவுட்டை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. மேலும், ஒரு நபரின் தனிப்பட்ட விவரங்களை கேட்பதில்லை. மேலும், இதற்காக பயனரிடம் வங்கி கணக்கு அல்லது இணைய வழி கட்டண செயலிகள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

إجمالي مرات مشاهدة الصفحة