நம்பினோமே... இனி எங்கள் கதி? ; பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கவலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 28, 2021

1 Comments

நம்பினோமே... இனி எங்கள் கதி? ; பகுதி நேர சிறப்பாசிரியர்கள் கவலை

பணி நிரந்தரம் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பகுதி நேரமாக, ஓவியம், உடற்கல்வி, இசை, கம்ப்யூட்டர் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பணிபுரிகின்றனர். ஒன்பது ஆண்டுகளாக பணிபுரியும் இவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் 7,700 ரூபாய் வழங்கப்படுகிறது. தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அனைத்து பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்கி, 100 நாட்களில் பணிநிரந்தரம் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பட்ஜெட் கூட்டத்தொடரில் இதுபற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஏமாற்றமடைந்த பகுதி நேர ஆசிரியர்கள், டுவிட்டரில் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர். அதில், '2012ம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்ட, 16 ஆயிரத்து 540 பகுதி நேர சிறப்பாசிரியர்களின் பணி நிரந்தரம் குறித்த அறிவிப்பு ஒரு வரியில் கூட வெளியாகாதது எங்களை ஏமாற்றமடைய செய்தது. இனி எங்கள் கதி? நம்பினோமே?' என குறிப்பிட்டு, அமைச்சர் மகேஷுக்கு, 'டேக்' செய்து வருகின்றனர்.

1 comment:

  1. ,2026 தமிழ் நாடு சட்ட சபைதேர்தலில் திமுக வெற்றி பெற்று வந்தால் பரீசீலனை செய்யலாம். ஏற்கனவே நிதி வெள்ளை அறிக்கயை பகுதி நேர ஆசிரியர்கள் பார்த்திருப்பார்கள்

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews