தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பயிற்சிப் பள்ளிகளில் படித்து தேர்ச்சி அடையாத தனித் தேர்வர்கள் தேர்வு எழுத வசதியாக செப்டம்பர் 2ம் தேதி முதல் தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் துறை திட்டமிட்டுள்ளது. இதையடுத்து, தனித் தேர்வர்கள் இன்று காலை 11.30 முதல் 11ம் தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வுகட்டணமாக ஒவ்வொரு பாடத்துக்கும் 50, மதிப்பெண் சான்று (முதலாம் ஆண்டு) 100, மதிப்பெண் சான்று (இரண்டாம் ஆண்டு) 100, பதிவு மற்றும் சேவைக்கட்டணம் 15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் 50 செலுத்த வேண்டும். இன்று முதல் 11ம் தேதிக்குள் விண்ணப்பிக்க தவறினால் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் 12ம் தேதி விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான கட்டணம் 1000 செலுத்த வேண்டும்.
Search This Blog
Saturday, August 07, 2021
Comments:0
டிடிஇ தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - தேர்வுத் துறை அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.