மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை – ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 02, 2021

Comments:0

மறு உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க தடை – ஜம்மு காஷ்மீர் அரசு அறிவிப்பு!

ஜம்மு காஷ்மீரில் அரசின் உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் என அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கல்வி நிறுவனங்கள் திறக்க தடை: இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் விரைவாக பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையைவிட இரண்டாம் அலையில் வைரஸானது உருமாற்றம் அடைந்து அதிக வீரியத்துடன் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் இந்தியா மற்ற நாடுகளின் பாதிப்புகளை கண்டு முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தி நோய் பரவலை கட்டுப்படுத்தியது. ஆனால் இரண்டாம் அலையின் தொடக்கமே இந்தியாவாக இருந்ததால் மத்திய, மாநில அரசுகள் செய்வதறியாமல் திணறியது. இந்த நிலையிலும் அரசுகள் சுகாதாரத்துறை உதவியுடன் தடுப்பு பணிகளை மேற்கொண்டது. முழு ஊரடங்கை அறிவித்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தியது. மேலும் கொரோனாவுக்கு எதிரான பேராயுதமாக தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தமையால் கடந்த ஜூன் மாதத்தில் தொற்று பரவல் வெகுவாக குறைந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மக்களின் வாழ்வாதாரம் கருதி தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கியது. மேலும் இந்த கொரோனா பரவலால் மாணவர்களின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில பள்ளிக்கல்வித்துறை மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசித்து வருகிறது.

இந்த நேரத்தில் கொரோனா மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் அரசின் உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் என ஜம்மு காஷ்மீர் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட மாட்டாது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கானது காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அலட்சியம் காட்டாமல் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என ஜம்மு காஷ்மீர் அரசு அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews