தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் – அரசுக்கு கோரிக்கை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 02, 2021

Comments:0

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர்களுக்கு உடனடி பணி நியமனம் – அரசுக்கு கோரிக்கை!

தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் தற்போது சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் உடற்கல்வி, ஓவியம், தையல், கம்ப்யூட்டர் போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

சிறப்பு ஆசிரியர்கள்:
தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் ஊராட்சி ஒன்றிய, தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை என 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களை தவிர பிற கலைகளையும் கற்றுக்கொடுப்பதில் அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் அடிப்படையில் சிறப்பு ஆசிரியர்களை பணியமர்த்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. பள்ளிகளில் பாடம் கற்பிப்பது தவிர்த்து உடற்கல்வி, ஓவியம், தையல், கம்ப்யூட்டர் போன்ற மாணவர்களின் வாழ்க்கைக்கு உதவும் வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதனை கையாள்வதற்கு இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் போன்றவர்கள் நேரடியாகவும், பதிவு உயர்வு மூலமும் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து பிப்ரவரி மாதம் பள்ளிகளில் காலியாக உள்ள தையல், ஓவிய ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்ட நிலையில் பனி நியமன ஆணை ஏதும் வழங்கப்படவில்லை.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிறப்பு ஆசிரியர்கள், தமிழகத்தில் காலியாக உள்ள 327 ஓவியம், 249 தையல் ஆசிரியர்களின் பணியிடங்கள் நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது. ஆனால் பணி ஆணை இன்னும் வழங்கப்படவில்லை எனவும், பணி ஆணைக்காக 5 மாதங்களாக காத்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இது போன்ற சிறப்பு ஆசிரியர்களின் கோரிக்கை விரைவில் கண்காணிக்கப்பட்டு அவர்களுக்கு பணியாணை விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews