உத்தரப் பிரதேசத்தில் கோவிட் பாதிப்பு குறைந்ததையடுத்து இன்று (ஆக.,16) 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கோவிட் தொற்று கட்டுக்குள் வருவதைத் தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது. மருத்துவ குழுவின் அறிக்கையின் படி, ஆக.,16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும்' என, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஆக., 16) முதல்வர் யோகி அறிவித்தபடி, 9 - 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. '50 சதவீத வருகைப் பதிவுடன் நடைபெறும் வகுப்புகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தப்பட்டு உள்ளது. மேலும், செப்., 1ம் தேதி கல்லூரிகளையும் திறக்க உள்ளதாக முதல்வர் யோகி அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.