ராணிப்பேட்டை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் 2021-22ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் தொடங்கியுள்ளது. இதற்கான வயது வரம்பு, விண்ணப்ப பதிவு உள்ளிட்ட விபரங்களை இப்பதிவில் காணலாம்.
மாணவர் சேர்க்கை:
கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில் அரசினர் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ள மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். மேலும் 27ம் தேதிக்கு பின்னர் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனுமதிக்கப்படாது என்று ராணிப்பேட்டை ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்றின் காரணமாக தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளை தொடர்ந்து தற்போது ஆசிரியர் பயிற்சிக்கும் மாணவர் சேர்க்கை தொடங்கி உள்ளது.
இது குறித்து ராணிப்பேட்டையில் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அன்பழகன் கூறியதாவது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசினர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடங்கியது. பிளஸ் 2 தேர்ச்சியுடன் பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல், பிற பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆசிரியர் பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் https://scert.tn.schools.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.