சிவில் & ஆர்க்கிடெக்சர் படிப்புகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, August 19, 2021

Comments:0

சிவில் & ஆர்க்கிடெக்சர் படிப்புகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிக வேலைவாய்ப்புகள்

சிவில் & ஆர்க்கிடெக்சர் படிப்புகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் இணைந்து நடத்தும் ‘உயர்வுக்கு உயர்கல்வி’ ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியில் துறை வல்லுநர்கள் தெரி வித்தனர்.

பிளஸ் 2 முடித்துள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும், அம்ரிதா விஷ்வ வித்யாபீடமும் இணைந்து ‘உயர்வுக்கு உயர்கல்வி’ என்ற தொடர் நிகழ்ச்சியை ஆன்லைனில் நடத்துகின்றன. ஜூலை 10-ம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. அன்றைய தினம் நடந்த 18-வது நிகழ்வில் சிவில் & ஆர்க்கி டெக்சர் படிப்பு குறித்து இத்துறை வல்லுநர்கள் உரையாற்றியதாவது: மேக்கன்ஸ் ஊட்டி ஸ்கூல் ஆஃப் ஆர்க்கிடெக்சர் டீன் பேராசிரியர் ஆர்.செல்வகுமார்: கட்டிடக்கலை என்பது, கட்டிடங்கள் / கட்டுமானங்களின் டிசைன் பற்றிய கலை-அறிவியல் தொடர்பான படிப்பாகும். 5 வருட படிப்பான இதில், தொழில்நுட்பம் பெருமளவு பயன்படுத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் 2 செமஸ்டர் தேர்வுகள் இருக்கும். கட்டிடக்கலை வரலாறு, கணிதம், தொடர்பு கொள்ளுதல், கட்டிடக்கலை வரைபடங்கள், கட்டுமான உத்திகள், கட்டிடக்கலை டிசைன் ஆகியவைகளைப் பற்றியும் சிமென்ட், மரம், கண் ணாடி, இரும்பு மற்றும் நானோ பொருட்கள் உள்ளிட்ட கட்டுமானப் பணிக்கு தேவைப்படுபவை பற்றியும் கற்பிக்கப்படும். ஏசி பொருத்துதல், குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, தீ அணைப்பு வசதி ஆகியவை கட்டிடங்கள் சர்வீஸ் பணிகளில் அடங்கும். இது தொடர்பான திட்டமிடுதல், நிதித்திட்டம் வகுத்தல், பட்ஜெட்டுக்குள் அடக்குதல் என இதன் வீச்சு பெரியது. இத்துறையில் பட்டப்படிப்புக்குப் பின் முதுகலை படிப்பிலும் பல தேர்வுகள் உள்ளன. சிவில் இன்ஜினீயரிங் துறையில் வேலைவாய்ப் புகள் அரசு மற்றும் தனியார் துறை,வெளிநாடு என கொட்டிக் கிடக்கின்றனவோ, அதேபோல் கட்டிடக்கலை துறையிலும் வேலைவாய்ப்பு அபரிமிதமாக உள்ளது. கோவை அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் பேராசிரியர் டாக்டர் கே.எம்.மினி: சிவில் இன்ஜினீயரிங் துறையிலுள்ள வாய்ப்புகள் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இங்கு நீங்கள் பி.டெக்.(சிவில் இன்ஜினீயரிங்), எம்.டெக்.(ஸ்ட்ரக்சுரல் & கன்ஸ்ட்ரக்‌ஷன் இன்ஜினீயரிங்) & பி.ஹெச்டி. (சிவில் இன்ஜினீயரிங்) ஆகிய படிப்புகளைப் படிக்கலாம். மிலிட்டரி இன்ஜினீயரிங் இல்லாத வகை இன்ஜினீயரிங்தான் சிவில் இன்ஜினீயரிங் ஆகும். அன்றாட வாழ்வில் எல்லா துறைகளிலும் (சாலைகள், பாலங்கள், அணைகள்) சிவில் இன்ஜினீயரிங் தேவைப்படுகிறது. ஆய்வு, திட்ட மிடுதல், டிசைன் செய்தல், கட்டுமானம், பராமரிப்பு என்ற வரிசையில் இத்துறை செயல்படுகிறது. மாநில, மத்திய அரசு நிறுவனங்கள், பெரியதனியார் கன்சல்டன்சி நிறுவனங்கள், சொந்த தொழில், எல்&டி உள்ளிட்ட கட்டுமான அமைப்பு நிறுவனங்கள் என இதில் வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இதுதவிர பன்னாட்டு நிறுவனங்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்புகளும் கிட்டும். அனைத்து கட்டுமானங்களுக்கும் அடிப்படையான ஜியோடெக்னிக்கல் இன்ஜினீயரிங் படிப்பும் இங்கு தரப்படுகிறது. அனைத்துபோக்குவரத்து தொடர்பான கட்டுமானங்களையும் திட்டமிட்டு திறம்படச் செய்ய டிரான்ஸ்பொரேஷன் இன்ஜினீயரிங் உதவுகிறது. சென்னை எல்&டி பொது மேலாளர் டி.விஜயகுமார்: சிவில் இன்ஜினீயரிங் துறையின் சிறப்பு என்னவெனில், இயற்கையை கட்டுக்குள் வைக்கும் ஒரு துறையாக இருப்பதுதான். ஆற்றில் வெள்ளம் வருமெனில், அதைத் தடுக்க அணைகட்டலாம். வெள்ளத்தின் தாக்கத் தைக் கட்டுப்படுத்தலாம். சிவில் இன்ஜினீயரிங், அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய துறையாக இருப்பதோடு, இயற்கையை திசை திருப்பும் வேலையைச் செய்வதால் சிவில் எனக்கு மிகவும் பிடித்த துறையானது. சிவில் இன்ஜினீயரிங்கில் முக்கியமானவைகளாக ஹவுசிங் டெவலப்மென்ட், வாட்டர் சப்ளை அண்ட் டிஸ்ட்ரிபியூஷன், சாலை, ரயில்வே, ஏர்போர்ட், வாட்டர்வேஸ் ஆகியவை உள்ளன. சிவில் படித்துவிட்டு சுயமாகவும் தொழிலைத் தொடங்கலாம். மேலும், அரசு மற்றும் தனியார் துறைகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. சப்ஜெக்ட் நாலெட்ஜ், பிராக்டிகல் நாலெட்ஜ், புதிய சிந்தனை, நவீன தொழில்நுட்பம், கற்பனையாற்றல் ஆகியனஉள்ளவர்களால் இந்தத் துறையில் நல்ல சாதனைகளைப் படைக்க முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் தனர்.

பின்னர், சிவில் & ஆர்க்கிடெக்சர் படிப்பு மற்றும் எதிர்கால வேலை வாய்ப்புகள் பற்றிய மாணவர்களின் கேள்விகளுக்கு துறை வல்லு நர்கள் விளக்கம் அளித்தனர். இந்த ஆன்லைன் வழிகாட்டி நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’நாளிதழின் முதுநிலை துணை ஆசிரியர் ம.சுசித்ரா நெறிப்படுத்தி னார். இந்த நிகழ்ச்சியை சவீதா இன்ஜினீயரிங் காலேஜ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, ஸ்ரீஈஸ்வர் காலேஜ் ஆஃப் இன்ஜி னீயரிங், சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி காலேஜ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி ஆகியவை இணைந்து வழங் கின. இந்த நிகழ்வில் பங்கேற்கத் தவறியவர்கள் https://www.youtube.com/user/tamithehindu/videos என்ற லிங்க் மூலம் முழு நிகழ்வையும் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews