விதிகளை மீறி கட்டப்பட்ட பள்ளி, கல்லுாரி கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டம், பாதியில் முடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதிகாரிகள் மவுனம் கலைந்தால் மட்டுமே, இதற்கு தீர்வு ஏற்படும்.தமிழகத்தில் நகர், ஊரமைப்பு சட்ட விதிகளின்படியே, கட்டடங்களை கட்ட வேண்டும். ஆனால், பெரும்பாலான இடங்களில் விதிகளை மீறி பள்ளி, கல்லுாரி கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.விதிமீறல்விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் வழக்கமான வழிமுறைகள் இருந்தாலும், பள்ளி, கல்லுாரி கட்டடங்களுக்கு சிறப்பு சலுகை வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கான வரன்முறை திட்டம், 2018ல் அறிவிக்கப்பட்டது. நீதிமன்ற தடையால், இத்திட்டத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது, முடிவு எடுக்க முடியாத நிலை உருவானது. இந்நிலையில், 2021 பிப்ரவரி 10ல் இத்திட்டம்தொடர்பான நீதிமன்ற தடை நீங்கியது. அதன்பின், பழைய மனுக்களில் கூடுதல் ஆவணங்கள் பெறுதல், புதிய மனுக்கள் பெறும் பணிகளை, நகர் ஊரமைப்பு துறை துவக்கியது. தேர்தல் காரணமாக இந்த பணிகள் முழுமை பெறவில்லை.இது குறித்து நகரமைப்பு வல்லுனர்கள் கூறியதாவது: தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, புதிய அரசு அமைந்து உள்ளது. இதனால், டி.டி.சி.பி.,யில் உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதனால், இத்திட்டத்தில் புதிய விண்ணப்பங்கள் பெற மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும். கூடுதல் வருவாய்ஏற்கனவே பெறப்பட்டவிண்ணப்பங்கள் மீது இறுதி முடிவு எடுப்பதில், மாவட்ட நிலையில் குழப்பங்கள் உள்ளன.இத்திட்டம் குறித்து, தமிழக அரசு முறையான ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கைகள் எடுத்தால், அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. டி.டி.சி.பி., அதிகாரிகள் மவுனத்தை கலைத்து, உண்மை நிலவரத்தை அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.