சென்னை பல்கலையின் தொலைநிலை கல்விக்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில், இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகள், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.நடப்பு கல்வி ஆண்டுக்கு, இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்ப பதிவு துவங்கியது. சென்னை பல்கலையின் துணைவேந்தர் கவுரி, மாணவர்களுக்கு விண்ணப்ப படிவம் வழங்கும் பணியை துவங்கி வைத்தார். விண்ணப்ப படிவங்களை நேரடியாகவும், www.ideunom.ac.in என்ற, இணையதளம் வழியாகவும் பதிவு செய்யலாம்.அதேபோல, தொலைநிலை கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கான 'ஆன்லைன்' வழி தேர்வுக்கான விண்ணப்ப பதிவும் நேற்று துவங்கியது. கடந்த 1980- - 81ம் கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்பு படித்து, சில பாடங்களில் அரியர் உள்ள மாணவர்கள், இன்னும் இரண்டு முறை தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளதாக, சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.