ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% அகவிலைப்படி (DA) உயர்வு வழங்க உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிலையில் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் சுதந்திர தின விழா நிகழ்ச்சியின் போது மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 6% டிஏ 2021 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்க உள்ளதாக முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் அறிவித்தார். மேலும் பிபிஎல் குடும்பங்களுக்கு சமையல் எண்ணெய் மானியத்தை அதிகரிக்க உள்ளதாகவும், மேலும் மண்டி மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.15 கோடி தொகையை அறிவித்துள்ளார். இந்த முடிவு அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.450 கோடி நிதி நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள மற்றும் வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு சமையல் எண்ணெயில் தற்போதுள்ள ₹ 10 லிட்டரிலிருந்து ₹ 30 லிட்டருக்கு பிபிஎல் கார்டு வைத்திருப்பவர்களுக்கும், ஏபிஎல்லுக்கு ₹ 5 முதல் ₹ 10 வரையிலும் மானியம் உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு மூலமாக அடுத்த 4 மாதங்களுக்கு 18.71 லட்சம் அட்டைதாரர்கள் பயனடைவார்கள். வளர்ச்சி பணிகளுக்காக மண்டி நகராட்சிக்கு 15 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். கோட்காயில் உள்ள டிஏவி கல்லூரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான விழாவிற்கு மாநில மின்துறை அமைச்சர் சுக்ராம் சவுத்ரி தலைமை வகித்தார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.