பஞ்சாப் மாநிலத்தில் தற்போது 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு நேற்று (ஆகஸ்ட் 2) முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டுமாக துவங்கியுள்ளது. இதற்கிடையில் வரும் 5 ஆம் தேதி முதல் 1 லிருந்து 5 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகளை திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு
கொரோனா 2 ஆம் அலை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் நேற்று (ஆகஸ்ட் 2) முதல் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் நேற்று முதல் மாநிலம் முழுவதுமுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளது. இதற்கு முன்னதாக ஜூலை 26 ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கி, தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 1 லிருந்து 5 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது குறித்து மாநில அரசாங்கத்தின் தகவலின் படி, ‘கொரோனா கட்டுப்பாடுகளை உறுதி செய்து சரியான நெறிமுறையைப் பின்பற்றி நேற்று (ஆகஸ்ட் 2) முதல் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன. மிகுந்த மகிழ்ச்சியுடன் மாணவர்கள் அனைவரும் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர். மாணவர்களை பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர்’ என குறிப்பிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக சில பள்ளிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறும் போது, ‘ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் காலை 8.10 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்பட்டது. பள்ளிகளுக்கு உள்ளே வரும் போது மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறைகளில் மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை முறையாக பின்பற்றி, பள்ளி வளாகங்களில் முகக்கவசம் அணிந்து காணப்பட்டனர்’ என தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.