புதுச்சேரியில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பில் சேர ஆகஸ்ட் 31 வரை விண்ணப்பிக்கலாம் என பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் பட்டயப் படிப்பு:
புதுச்சேரியில் கொரோனா இரண்டாம் அலை குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இதனை அடுத்து ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ள கல்வி நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி இன்னும் பயன்பாட்டிற்கு வராததால் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியாதை அடுத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து புதுச்சேரியில் ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் 2021-22ம் கல்வி ஆண்டிற்கான இரண்டு ஆண்டு பட்டயப் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்படிப்புக்கு விண்ணப்பிக்க மேல்நிலைப் பள்ளி தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில் குறைந்த பட்சம் 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எம்.பி.சி., மற்றும் பி.சி., பிரிவினர் குறைந்த பட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://schooledn.py.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் அல்லது லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இருந்தும் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை வரும் 31ம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.