திண்டுக்கல்: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 27.08.2021 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு விசாகன் தகவல் தெரிவித்துள்ளார்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, August 20, 2021

Comments:0

திண்டுக்கல்: குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 27.08.2021 வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் திரு விசாகன் தகவல் தெரிவித்துள்ளார்!

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் (TIIC) மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு மாநில நிதிக் கழகம் ஆகும். 1949 ம் ஆண்டு துவங்கப் பெற்ற இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி கடனுதவி வழங்கி தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது. இக்கழகம் குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில் பிரிவுகளுக்கு புதிய புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத் திட்டத்தின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது. திண்டுக்கல் கிளை அலுவலகத்தில் (முகவரிஃபிளாட் எண்.2, பாண்டியன் நகர் முதல் தெரு, காட்டாஸ்பத்திரி அருகில், திண்டுக்கல் - 6240001) குறு சிறு மற்றும் நடுத்தர (MSME) தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா 18.08.2021 முதல் 27.08.2021 வரை நடைபெறுகிறது. இச்சிறப்பு தொழில் கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி. (TIIC)யின் பல்வேறு கடன் திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், மத்திய மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6% வட்டி மானியம் மற்றும் இதர மானியங்கள்), புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS) போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25% முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.150 இலட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்பிக்கப்படும் பொது கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படும். NEEDS திட்டத்திற்கு ஆய்வு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தங்களது தொழில் திட்டங்களுடன் வருகை தந்து தொழில் கடன் மற்றும் மத்திய மாநில அரசுகளின் மானிய சேவைகளை பயன்படுத்திக் பயன்பெறலாம் ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews