அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 28, 2021

Comments:0

அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
தொடக்கக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் துவக்க / நடுநிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் பணியிடங்களையும் கருத்தில் கொண்டு பணியாளர் நிர்ணயம் உரிய ஆய்வு அலுவலர்களால் செய்யப்பட்டு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. அதேபோன்று 2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கு பணியாளர் நிர்ணயம் செய்து உரிய ஆணைகள் வழங்கப்படவேண்டும். அரசு உதவி பெறும் துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாளர் நிர்ணயம் செய்வது சார்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் நெரிமுறைகளை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுத்திட தெரிவிக்கப்படுகிறது, மேலும், மாவட்டக் கல்வி அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் இப்பணியினை முடித்து உரிய கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஆணைகளை வழங்குவதை உறுதி செய்திடுமாறும்

1 இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009, மற்றும் அரசாணை (நிலை) எண்.231 பள்ளிக் கல்வித் துறை நாள் 1108.2010 மற்றும் அரசாணை (நிலை) எண் 201 பள்ளிக் கல்வி (ப.க.5(2)த் துறை, நாள் 20:122018 ஆகிய அரசாணைகளை அடிப்படையாகக் கொண்டு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

2 மாணவர்கள் எண்ணிக்கை சார்பான விவரங்கள் EMIS இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து அதன் நகல் பள்ளிவாரியாக கோப்பில் வைக்கப்பட வேண்டும் என்பதனையும் EMIS விவரங்களின் அடிப்படையாக கொண்டு பணியாளர் நிர்ணயம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது. 3. இச்செயல்முறைகள் கிடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் பணியாளர் நிர்ணய ஆணை பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். பணியாளர் நிர்ணய ஆணை அனுப்ப்பட்ட ஒரு வாரத்திற்குள் பள்ளிகளின் செயலர் / நிர்வாகி/தாளாளர் அளிக்கும் Objection அல்லது representations ஆகியவற்றை பெற்று ஒரு வாரத்திற்குள் அதன் மீது இறுதி ஆணை அளிக்கப்படல் வேண்டும்.

4. மேலும் இவ்வாறு ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி பணியாளர் நிர்ணயம் செய்யப்படும் போது ஆசிரியருடன் உபரி எனக் கண்டறியப்படும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடங்களின் விவரங்கள், பணியிடம் அனுமதிக்கப்பட்டதற்கான அரசாணையின் விவரங்களையும் சமர்பித்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

5. பள்ளி வாரியாக உள்ள காலிப்பணியிட எண்ணிக்கை விவரத்தையும் அளித்திட தெரிவிக்கப்படுகிறது.

6. நீதிமன்றத் தீர்ப்பாணையில் தெரிவித்துள்ளவாறு பணியாளர் நிர்ணயம் செய்த பிறகு உரிய ஆசிரியர்களின் பட்டியலை தயாரித்து தயார் நிலையில் வைத்திட அறிவுறுத்தப்படுகிறது. 7. மேலும் பணியாளர் நிர்ணய விபரங்கள் குறித்தான தொகுப்பறிக்கையினை (பள்ளி வாரியாக ) மாவட்ட அளவில் தொகுத்து 15.09.2021 க்குள் அறிக்கையாக இயக்குநருக்கு சமர்பித்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.


8. பணிநிரவல் பணிகளை நீதிமன்ற தீர்ப்பாணையில் தெரிவித்துள்ளவாறு 25.09.2021 க்குள் முடிக்கப்பட வேண்டும்.

9. இதனடிப்படையில் இக்கல்வியாண்டிற்கான (2021-2022) அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 31072021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அனைத்துவகை ஆசிரியர்கள் ! மாணவர்கள் பணியிட நிர்ணயம் சார்பான பணிகள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) மூலமாக மேற்கொள்ளப்படவிருக்கிறது.

10. எனவே, இப்பணிகளை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் (EMIS) இணையதளத்தில் மேற்படி பள்ளிகள் சார்ந்த கீழ்க்குறிப்பிட்ட விவரங்களைப் பதிவேற்றம் செய்திட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

11. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 3107.2021 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையினை வகுப்பு வாரியாகவும்(Class wise) மற்றும் தமிழ் வழி / ஆங்கில வழியில் மாணவர்களின் விவரங்கள் ஆகியவற்றினை பதிவேற்றம் செய்தல் வேண்டும்.

12. சிறுபான்மை மொழி பள்ளிகளுக்கு தனியாக விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 13. ஒவ்வொரு அரசு உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் அரசால் அனுமதிக்கப்பட்ட (Sanction Post Details) அனைத்து வகை ஆசிரியர்கள் பணியிடங்களின் விவரங்களை பள்ளியின் அளவை பதிவேட்டின் படி(Scale Register) ஒப்பிட்டு சரிபார்த்து பதிவேற்றம் செய்திடல் வேண்டும் அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும் போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியர் இன்றி உபரி என கண்டறியப்பட்டு (Surplus Post without Person) இயக்குநரின் பொது தொகுப்பிற்கு சரண்செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

14. அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் அனைத்து வகை ஆசிரியர்கள் சார்பான முழு விவரங்களையும் (Teacher Profile) எவருடைய பெயரும் விடுபடாமல் (EMIS) இணையதளத்தில் உரிய கலங்களில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.

மேற்கண்டவாறு அறிவுரைகள் வழங்கி இப்பணியினை எவ்வித சுணக்கமும் இன்றி மேற்கொள்ளுமாறு அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews