லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகை 2021-22 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, August 01, 2021

Comments:0

லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகை 2021-22

லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகை 2021-22

காட்சி கலைகள் - சிற்பம், ஓவியம், மட்பாண்டம், வரைகலை, கலை வரலாறு, கலை திறனாய்வு, கலைகள் மேலாண்மை, கலைத் தொகுப்பு மற்றும் ஆவணப்படுத்துதல் ஏனைய துறையில் பன்னிரண்டு மாத காலத்திற்கு மாதம் 220,000/- வீதம் 2021-22 ஆண்டுக்கான லலித் கலா அகாடமி கல்வி உதவித்தொகைகள் மானியத்துக்காக 21 முதல் 35 வயதுக்குள்ளான இளம் & வளர்ந்து வரும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வியாளர்கள் லலித் கலா அகாடமியின் பிராந்திய மையங்களில் பணியாற்ற வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் அகாடமியின் இணையதளம் www.Jalitkala.gov.in என்பதிலிருந்து பதிவிறக்கம் செய்யப்படலாம் அல்லது லலித் கலா அகாடமி, ரபீந்தர பவன், 35, பெரோஸ்ஷா சாலை, புதுடெல்லி-110001 அலுவலகத்திலிருந்து காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். படிவம் லக்னோ, கொல்கத்தா, சென்னை, புவனேஸ்வர், கர்ஹி, சிம்லா, அகமதாபாத் மற்றும் அகர்தாலா ஆகியவிடங்களில் அகாடமியின் பிராந்திய மையங்களிலும் கிடைக்கப்பெறும்.
இணைப்புகளுடன் முறையாக நிரப்பப்பட்ட விண்ணப்பம் செயலாளர் பொறுப்பு, லலித் கலா அகாடமி, புதுடெல்லி அவர்களுக்கு விளம்பரம் வெளியான தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் வந்துசேர வேண்டும். தொலைபேசி 011-23009225/219.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews