மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 5 முதல், 14 வயது வரையிலான மாணவர்களுக்கு, கட்டாய கல்வி வழங்க வேண்டும்.
நாடு முழுதும் உள்ள தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி., அல்லது ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்கள், 8ம் வகுப்பு வரை, 25 சதவீத இடங்களில், கட்டணமின்றி படிக்க முடியும்.இதன்படி, தமிழகத்திலும், 10 ஆண்டுகளாக இலவச மாணவர் சேர்க்கை திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த ஆண்டுக்கான இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று துவங்குகிறது.இதற்கு, https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில், ஆக., 3க்குள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. விண்ணப்ப பதிவுக்கு முன், மாணவர்களின் புகைப்படம், பிறப்பு சான்றிதழ், பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆதார், ரேஷன் கார்டு, வருமான சான்று, ஜாதி சான்றிதழ் மற்றும் சிறப்பு பிரிவினருக்கான சான்றிதழ்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.இது குறித்து, சந்தேகங்கள் இருந்தால், 14417 என்ற, தொலைபேசி எண்ணில் பேசி தெரிந்து கொள்ளலாம். இதற்காக மாவட்ட வாரியாக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். அவர்களின் எண்களை, விண்ணப்ப பதிவு செய்யும் இணையதளத்திலேயே தெரிந்து கொள்ளலாம் என, மெட்ரிக் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.